சென்னைக்கு வேலை தேடி போகத்தேவையில்லை.. தென் மாவட்டங்களிலேயே ஐடி பார்க்.. அமைச்சர் தகவல்

Subscribe to Oneindia Tamil

கோவை : தென் மாவட்டங்களின் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெரும் வகையில், அவர்கள் பகுதியிலேயே தகவல் தொழில் நுட்ப பூங்காக்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

இதன் மூலம் சென்னைக்கு வேலை தேடி செல்ல வேண்டிய தேவையிருக்காது என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

கோவை விளாங்குறிச்சி டைடல் பார்க்கில் 114 கோடி மதிப்பில் புதியதாக சிறப்பு பொருளாதார மண்டல கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

கட்டுமான பணிகள்

கட்டுமான பணிகள்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவகிறது., விரைவில் கட்டுமான பணிகளை நிறைவு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அமைச்சர் தகவல்

அமைச்சர் தகவல்

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் துறையின் மூலமாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

சென்னைக்கு செல்கிறார்கள்

சென்னைக்கு செல்கிறார்கள்

தென் மாவட்டங்களில் மிக குறைவாக வேலை வாய்ப்பு உள்ளது . அதனால் தென்மாவட்ட இளைஞர்கள் சென்னை போன்ற பிற மாவட்டங்களுக்கு செல்கின்றார் அதனை தடுக்க தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக கவனம் செலுத்தப்படும் . கடந்த 10 ஆண்டுகளில் தொழில் முதலீடு அண்டை மாநிலங்களுக்கு சென்று விட்டது என்று தெரிவித்தார்.

அமைச்சர் தலைமை

அமைச்சர் தலைமை

இதனை தொடர்ந்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில் டைட்டில் பார்க் வளாக கூட்டரங்கில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது மேலும் இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் நீரஜ் மித்தல், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+