"லால்ஜி, சேட்ஜி".. தமிழக பாஜகவை ஆக்கிரமிக்கும் வடக்கத்தியர்கள்.. பறிபோகும் தமிழர் அரசியல்!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: தமிழகத்தின் பெரும்பாலான தொழில்களை வட இந்தியர்கள் தம் வசப்படுத்தியிருக்கும் நிலையில் அரசியலிலும் படுதீவிரமாக களமிறங்கியிருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது கோவை மாவட்ட பாஜகவின் பேனர்.

கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோஹன்லால் (ரமேஷ்) என்பவர் பேனர் ஒன்றை வைத்திருக்கிறார். அதில் கோவை மாவட்ட பாஜக இளைஞரணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்ததற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

இந்த பேனரில் பாஜக இளைஞரணி மாவட்ட பொருளாளர் என ஹரீஸ் பட்டேல் பெயர் படத்துடன் அச்சிடப்பட்டுள்ளது. கோவை பாஜக இளைஞரணியில் வட இந்தியர்கள் கை ஓங்கி வருவதையே இந்த பேனர் வெளிப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

மார்வாடிகள் கோட்டை

மார்வாடிகள் கோட்டை

தமிழகத்தின் பெரும் தொழில் நிறுவனங்கள் பெரும்பாலானவை வட இந்தியர்களின் கைகளில்தான் உள்ளன. சென்னையில் சவுகார் பேட்டை மார்வாடிகளின் கோட்டையாக இருக்கிறது; இங்கே வாக்கு சேகரிக்க கூட இந்தியில்தான் சுவரொட்டி அடிக்க வேண்டும். இப்படி லோக்சபா எம்.பி. தயாநிதி மாறனுக்காக இந்தியில் என்றோ யாரோ வாக்கு கேட்டு அடித்த சுவரொட்டி இன்றும் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

வர்த்தக சங்கங்கள்

வர்த்தக சங்கங்கள்

இதேபோல் கோவை உள்ளிட்ட தமிழக நகரங்களின் மையமான பகுதிகள் வட இந்தியர்களின் வசமாகி இருக்கிறது. வர்த்தக சங்கங்களின் தலைமை பொறுப்புகள் ஏற்கனவே வட இந்தியர் கைகளில்தான் இருக்கிறது. இப்போது தங்களுக்கான் அரசியலை பாஜக மூலம் அரங்கேற்ற பெருவாரியாக களம் இறங்கியிருக்கின்றனர் என்பதைத்தான் கோவை பேனர்கள் வெளிப்படுத்துகின்றன.

வட இந்தியர் வசமாகும் பாஜக

வட இந்தியர் வசமாகும் பாஜக

தமிழக அரசியலில் உக்கம்சந்த் (அதிமுக- திமுக) போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்குத்தான் ஒன்றிரண்டு பேர் அரசியலில் இருந்தனர். இப்போது பாஜக மூலமாக கொத்து கொத்தாக களமிறங்குகின்றனர் என்பதை கோவை பேனர் மட்டுமல்ல.. சென்னையில் பாஜக நடத்திய சி.ஏ.ஏ. ஆதரவு பேரணியிலும் வெளிப்பட்டது. பாரதிய ஜனதா கட்சியின் தமிழர் விரோதப் போக்கால் அது மக்களிடத்தில் அன்னியப்பட்டு நிற்கிறது.

தமிழக பாஜக தலைவராக வட இந்தியர்?

தமிழக பாஜக தலைவராக வட இந்தியர்?

இப்போது எப்படியாவது வாக்குகள் பெற வேண்டும் என்பதற்காக வட இந்தியர்களை பெருவாரியாக பாஜக தம்முள் இணைத்துக் கொண்டிருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால் தமிழக பாஜகவின் தலைவராக யாரோ ஒரு சேட் ஜியோ அல்லது லால்ஜியோதான் வர வாய்ப்பும் உள்ளது போல! எச். ராஜா ஜீ, பொன்னார் ஜீ, வானதி ஜீ போன்றோர் கரடியாய் கத்தினாலும் வாரி கொடுக்கும் வடக்கத்தி வாலாக்களிடம்தான் அடகு போய்க்கொண்டிருக்கிறது தமிழக பாஜக.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+