கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்திய பொருளாதார வளர்ச்சியில் வடமாநிலத்தவர் பங்கு அதிகம்.. பா.ஜ.க.வின் வானதி சீனிவாசன் சொல்கிறார்

Google Oneindia Tamil News

கோவை: இந்திய பொருளாதார வளர்ச்சியில் வடமாநிலத்தவர் பங்கு மிக அதிகமாக இருப்பதாக கோவை பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று ரக்சா பந்தன் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தில் பெண்கள் சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளும் ஆண்களுக்கு ராக்கி கயிறை கட்டி சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவார்கள்.

சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாகவே ரக்சா பந்தன் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கோவையில் ஆர்.எஸ் புரத்தில் பாஜக சார்பில் ரக்சா பந்தன் தினம் கொண்டாடப்பட்டது.

கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை: தமிழ்நாட்டில் கடன்கார ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது: எச்.ராஜா விமர்சனம் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை: தமிழ்நாட்டில் கடன்கார ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது: எச்.ராஜா விமர்சனம்

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

கோவை ஆர்.எஸ். புரம் பாரதிய ஜனதா மண்டலம் சார்பில் நட்சத்ரா குளோபல் அப்பார்ட்மெண்ட் பகுதியில் வட மாநிலத்தவர்கள் சார்பில் ரக்க்ஷாபந்தன் நடந்தது. விழாவில் கலந்து கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் ராக்கி கயிறு கட்டி தங்களது சகோதர பாசத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த விழாவில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து கொண்டார்.

சகோதர பாசம்

சகோதர பாசம்

அப்போது பேசிய வானதி சீனிவாசன் கூறியதாவது:- ரக்சா பந்தன் விழா இன்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சகோதரர், சகோதரி பாசத்தின் அருமையை விளக்கும் வகையில் ரக்சா பந்தன் கொண்டாடப்படுக்கிறது. ராக்கி கயிறை ஒருவர் கையில் கட்டி விட்டால், பாசம் நேசம் அன்பு என வாழ்நாளின் இறுதிவரை சகோதர பாசத்தோடு அவர்களுடைய உறவு தொடரும். இத்தகைய மகத்துவம் மிகுந்ததுதான் இந்த ரக்சா பந்தன் விழாவாகும். கோவை தொழில் வளர்ச்சி மிக்க மாநிலமாகும்.

வடமாநிலத்தவர்கள் பங்கு

வடமாநிலத்தவர்கள் பங்கு

வடமாநிலத்தில் இருந்து வருகை தரும் மக்கள் இங்குள்ள கோவை மக்கள் மத்தியில் ஒன்றாக இணைந்து, அவர்களின் நன்மை, தீமை, வளர்ச்சி என அனைத்திலும் பங்கெடுத்து வருகின்றனர். கோவை மக்களுக்கு அனைத்து வகையிலும் நீங்கள் உறுதுணையாக இருந்து வருகிறீர்கள். கொங்கு மண்டலத்தில் பல்வேறு தொழில்களை தொடங்கி தமிழகம் மற்றும் இந்திய பொருளாதார வளர்ச்சியிலும் வடமாநிலத்தவர்கள் பங்கு மிக அதிகமாக இருக்கிறது.

மதம், இன, மொழி வேண்டாம்

மதம், இன, மொழி வேண்டாம்

இதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் தொடர்ந்து இனம் மதம் மொழி என்று பாராமல் அனைவரும் இந்த நன்னாளில் சகோதர பாசத்துடன் இணைந்திருப்போம் என்றுவானதி சீனிவாசன் பேசினார். ரக்‌ஷா பந்தன் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி வாழ்த்து

இதேபோல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் வட மாநிலங்களிலேயே அதிகம் ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருக்கும் வட இந்தியர்கள் . ரக்‌ஷா பந்தன் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Coimbatore BJP MLA Vanathi Srinivasan says Northerners have a huge role to play in India's economic growth said. Raksha Bandhan is celebrated across the country today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X