Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி பேரணியின்போது மாணவர்கள் சீருடையுடன் நின்ற விவகாரம்.. பள்ளிக்கே சென்ற டீம்.. அதிரடி ஆக்‌ஷன்!

Subscribe to Oneindia Tamil

கோவை: பிரதமர் மோடி பேரணியின்போது பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் சாலையில் நின்றது சர்ச்சைக்கு உள்ளான நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியில் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி, ஜூன் 2 வரை நடக்கிறது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்.19ஆம் தேதி நடக்கிறது. இந்த ஆண்டில் மட்டுமே தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே 5வது முறை அடுத்தடுத்து விசிட் அடித்த பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக தமிழ்நாட்டுக்கு வருகை தந்து கோவையில் நேற்று ரோடு ஷோவில் பங்கேற்றார்.

Officials inquire at coimbatore school over students standing on the road during Pm modi road show


கோவை சாய்பாபா கோவில் பகுதியில் தொடங்கிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ, ஆர்.எஸ்.புரம் பகுதியில் நிறைவடைந்தது. பிரதமர் மோடி வரும் வழியெங்கும் பாஜக தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் சாலையின் இரு புறங்களில் நின்று அவரை வரவேற்றனர். வழிநெடுகிலும் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோவில் பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்து பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாய்பாபா காலனி பகுதியில் பிரதமர் மோடியை வரவேற்க பள்ளி மாணவர்கள் சீருடையுடன் நிற்க வைக்கப்பட்டிருந்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

தேர்தல் பிரச்சாரங்களுக்கு மாணவர்களை அழைத்து வரக்கூடாது என்பது தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதி. தேர்தல் ஆணைய விதிகள் மீறி பிரதமர் பேரணியில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்ததற்கு பல்வேறு தரப்பிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில், பரப்புரைகளில் குழந்தைகளை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டி எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் மாணவர்கள் நேற்று மோடி பேரணியில் பங்கேற்க வைக்கப்பட்டுள்ளனர். கோவையில் பிரதமர் மோடி பேரணியில் மாணவர்களை பங்கேற்க வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோவை தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ஆகியோர் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்ற அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சார பயணத்தின்போது, பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் பங்கேற்க வைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+