உஷார்.. கோவை மார்க்கெட்டில் கெட்டுப்போன மீன்கள் விற்பனையா? பகீர் கிளப்பும் அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை, உக்கடம் லாரிபேட்டை மொத்த மார்க்கெட் மற்றும் செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள சில்லறை மீன் மார்க்கெட் பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டபோது, கெட்டுப்போன நிலையில் இருந்த 103 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர். கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை உக்கடத்தில் உள்ள லாரிபேட்டையில் மொத்த மீன் மார்க்கெட்டும், உக்கடம் - செல்வபுரம் சாலையில் சில்லறை மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு அனைத்து வகையிலான மீன்களும் விற்கப்படுவதுடன், குறைந்த விலைக்கும் விற்கப்படுவதால் விடுமுறை தினங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில், இப்பகுதிகளில் கெட்டுப்போன மீன்களை ஏமாற்றி பொதுமக்களிடம் விற்பதாகவும், இதனால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன.

coimbatore fish market

இந்நிலையில், கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மீன் மார்க்கெட்டுகளில் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார். உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலரின் அறிவுறுத்தலின்படி, உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீன் வளர்ச்சி துறை அதிகாரிகள் என 12 பேர் அடங்கிய 6 குழுக்கள், உக்கடம் லாரி பேட்டை பகுதிகளில் உள்ள 35 மொத்த மீன் மார்க்கெட் விற்பனை கடைகளிலும் மற்றும் செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள உக்கடம் சில்லறை மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள 16 கடைகளிலும் மொத்தம் 51 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த கள ஆய்வின்போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்களில் கெட்டுப்போன மீன்கள் மற்றும் பழைய மீன்கள் ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. மொத்த மீன் விற்பனை கடைகளில் 5 கடைகளில் கெட்டுப்போன நிலையில் இருந்த சுமார் 65 கிலோ அளவிலான மீன்கள் மற்றும் 4 சில்லறை மீன் விற்பனை கடைகளில் சுமார் 38.05 கிலோ கெட்டுப்போன மீன்கள் மொத்தம் 103.5 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

இதன் மொத்த சந்தை மதிப்பு சுமார் 50 ஆயிரத்து 150 ரூபாய் ஆகும். கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த சில்லறை மற்றும் மொத்த வியாபார செய்யும் 9 கடைகளுக்கு கெட்டுப்போன மீன்கள் வைத்திருந்தது தொடர்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006, பிரிவு 55 இன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்று கெட்டுப்போன மற்றும் பழைய மீன்களை விற்பனை செய்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இது போன்ற திடீர் கள ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்வது மற்றும் இதுபோன்ற குறைபாடுகளை கண்டறிந்தால் 94440 42322 என்ற உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், Google Play store இல் இருந்து உணவு பாதுகாப்பு துறையின் tnfoodsafetyconsumer App என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து புகார் செய்யலாம் என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+