அது ரொம்ப ஆபத்தான விஷயம்.. சுப்பிரமணியன் சுவாமியே சொல்லிட்டாரு..கோவையில் கொந்தளித்த திருமாவளவன்
கோவை : ஒரு நாடு ஒரே தேர்தல் என்பது ஆபத்தானது, அதே நேரத்தில் அது சாத்தியமற்றது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமியே கூறியுள்ளார் என விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்த கர்நாடக அரசின் உத்தரவை கண்டித்தும், அரசியலமைப்பு சட்டங்கள் வழங்கியிருக்கும் உரிமைகளுக்கு எதிரான விஷயத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும் கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் ஹிஜாப் எனது நம்பிக்கை என்ற முழக்கத்துடன், உரிமை மீட்பு பேரணி மற்றும் மாநாடு கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்றது.

வெறுப்பு அரசியல்
இந்த இந்தப் பேரணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோவை மாவட்ட தலைவர் அப்துல் அக்கீம் துணைத் தலைவர் காலித் முஹம்மத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன், எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து மாநாட்டில் பேசிய திருமாவளவன், "எளிமையான தமிழில் இந்த குரான் தயாரிக்கபட்டுள்ளது. இதனை வெளியிடும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமை. மதநல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும், வெறுப்பு அரசியலை செய்பவர் யாராக இருந்தாலும் அவரை நாம் வெறுத்து ஒதுக்க வேண்டும்.

பாஜகவால் பிரச்சினை
நாமக்கல் மாவட்டம் பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு, அவரது ஜாதி பெயரை சொல்லி திட்டியதன் விளைவாக இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜகவை இந்து சமுக மக்கள் புரிந்து கொண்டால் நாட்டில் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையும் வராது நாங்கள் அவர்களது அரசியலை தான் எதிர்க்கிறோம், இந்துக்களை அல்ல. அவர்களது இந்த அரசியல் தான் உள்ளாட்சி தேர்தலில் இந்த பதிலை கொடுத்துள்ளனர்.

உரிய பாதுகாப்பு
தமிழக மீனவர்களுக்கு சிங்களர்களால் கைது, தாக்குதல் தொடர்கிறது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் சிங்களர்களின் தாக்குதல் நிலை நீடித்து வருகிறது இது தொடர்பாக முதல்வர் பிரதமரை சந்தித்து பேச வேண்டும். அகதிகளாக வரும் இலங்கை தமிழர்களுக்கு முறையான பாதுகாப்பு அளிக்க வேண்டும், தமிழக அரசு அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஒன்றிய அரசு அவர்களை இலங்கை அகதிகள் என்ற தன் அடிப்படையில் அவர்களை வரவேற்று உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

சாத்தியம் இல்லை
மத்திய அரசை கண்டித்து நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் அனைவரும் கலந்துகொள்கின்றனர். வி.சி.க வும் திரளாக ஆதரவளித்து கலந்துகொள்ளும். ஒரு நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு ஆபத்தான விசயம் , தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக சொல்லியிருக்கும் நிலையில் அது சாத்தியமற்றது என பாஜக சுப்ரமணிய சாமியே தெரிவித்துள்ளார்." என திருமாவளவன் பேசினார்
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications