புத்துணர்வு முகாமில்... கோயில் யானை மீது கொடூர தாக்குதல்... இருவர் சஸ்பெண்ட்
கோவை: தேக்கம்பட்டி பகுதியில் யானைகள் புத்துணர்வு நல்வாழ்வு முகாமில் பாகன்கள் யானையைக் கடுமையாகத் தாக்கும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பாகனும், உதவி பாகனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video

தமிழகத்தில் யானைகள் புத்துணர்வு முகாம் கடந்த 7ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டி பகுதியில் தொடங்கியது. இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் யானைகள் தேக்கம்பட்டிக்கு அழைத்து வரப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று யானைகள் புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் யானை ஜெயமால்யதாவை அந்த யானை பாகன் வினில்குமாரும் அவரது உதவி பாகனும் அடித்துத் துன்புறுத்துவதும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

அதில் கட்டி வைக்கப்பட்டுள்ள யானையை இருவரும் சேர்ந்த கொடூரமாகத் தாக்குகின்றனர். அந்த யானையோ வலி தாங்க முடியாமல் பிளிறுகிறது. பாகன்களின் கட்டளைகளை மதிக்காததால் யானை தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ வன உயிரியில் ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் யானையைத் தாக்கிய பாகன் வினில் குமார், பாகனுக்கு உதவியாக இருந்த சிவபிராகசம் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து இந்து அறநிலைத் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், நேற்று மாலை கால் சங்கிலியை கழட்டிய யானை, பாகனின் காலை மிதித்ததாகவும், அந்த யானை அங்கிருந்து வெளியேறி இருந்தால் மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தினால் யானையை எச்சரிக்கும், வகையில் தாக்கியதாக அவர்கள் இருவரும் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
அதேசமயம் யானைகளைக் கொடுமைப்படுத்துதல் குற்றம் என்ற பிரிவில் வனத்துறையினர் இருவர் மீதும் நடவடிக்கை எடுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications