கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொங்கல் பண்டிகையில் கலக்கிய கோவை பள்ளி மாணவிகள்..கலகல போட்டிகள்

Google Oneindia Tamil News

கோவை:கோவையில் பள்ளி ஒன்றில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழ் பாரம்பரிய முறைப்படி கிராமத்து பொங்கலாக கொண்டாடப்பட்டது.

கோவையில் உள்ள சர்வதேச பள்ளி ஒன்றில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பொங்கல் பண்டிகையை பாரம்பரிய முறைப்படி கிராமத்து பொங்கலாக கொண்டாடினர். விழாவில் சிறப்பு வி௫ந்தினராக பள்ளியின் தலைவர் சுகுணா கலந்து கொண்டார்.

One of the most popular south indian festival pongal, celebrated in school, coimbatore

பள்ளியின் நிறுவனர் லட்சுமி நாராயணசாமி பள்ளியின் அறங்காவலர் ராஜா மணியம்மாள் ஆகியோர் முன்னிலையில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் காவல் தெய்வமான அய்யனார் பள்ளி வளாகத்தில் வீற்றி௫க்க குதிரை வண்டி பவனி வந்தது.

அதன் பின்னர் முளைபாரி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் பள்ளியின் தலைவர் சுகுணா பொங்கலிட, சூரிய பகவானுக்கு பொங்கல் படைத்து அனைவரும் வழிபட்டனர் .அதனை தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

One of the most popular south indian festival pongal, celebrated in school, coimbatore

கயிறு இழுத்தல், பலூன் உடைத்தல், நொண்டி, கண்ணா மூச்சி, பூப்பறிக்க வ௫கிறோம்,கிடுகிடு ஓட்டம் என நடைபெற்ற போட்டிகளில் பலர் கலந்துகொண்டனர். மேலும் போட்டிகளுக்கு இடையே மாணவ,மாணவிகளின் ஒயிலாட்டம், கரகாட்டம்,கும்மி நடனங்களும் நடைபெற்றன.

ஆடவர்களுக்கான உரிஅடித்தல் போட்டி உற்சாகத்துடன் கேளிக்கையுடன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ,மாணவிகள் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாணவ,மாணவிகளுக்கு பொங்கலும் வழங்கப்பட்டது.

English summary
One of the most popular south Indian festival Pongal, celebrated in school, Coimbatore. Children’s were in school dressed and enjoyed the occasion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X