எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க போன செங்கோட்டையன்.. விஷயம் தெரிந்ததும் அதிமுகவினர் செய்த காரியம்
கோவை: தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்பு செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன், இன்று மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது சிறுமுகை பெத்திக்குட்டை பகுதியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு செங்கொடையன் மாலை அணிவிக்க சென்றார். ஆனால் இந்த சிலை அதிமுக சார்பில் அமைக்கப்பட்டது என்பதால், தவெகவினர் மாலை அணிவிக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும் செங்கோட்டையன் மாலை அணிவிக்க முடியாதபடி, சிலைக்கு பூட்டு போட்டு சென்றனர். இதேபோல் அங்கிருந்த அண்ணா சிலைக்கும் செங்கோட்டையன் மாலை அணிவிக்க சென்றார். ஆனால், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க தவெகவினர் அனுமதி பெறாததால் அண்ணா சிலையும் பூட்டப்பட்டு இருந்தது.

தவெகவுக்கு வந்த செங்கோட்டையன்
அதிமுகவில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர் காலத்திலேயே செல்வாக்குடன் விளங்கியவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வசித்த செங்கோட்டையனுக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் குரல் கொடுத்த நிலையில், அதற்கு எடப்பாடி மறுப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் முற்றியது. இதன் தொடர்ச்சியாக செங்கோட்டையனின் கட்சி பதவிகளை பறித்த எடப்பாடி பழனிசாமி, அடுத்த சில வாரங்களில் கட்சியில் இருந்தே தூக்கினார்.
ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படங்களுடன்
இதையடுத்து, செங்கோட்டையன் பாஜகவில் இணையலாம் எனக் கூறப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக நவம்பர் மாத இறுதியில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்தார். தவெகவில் இணைந்த போதிலும் தனது சட்டைபையில் ஜெயலலிதா படமே தொடர்ந்து வைத்து வலம் வருகிறார். அதேபோல, ஜெயலலிதா நினைவு நாளிலும் செங்கோட்டையன், மரியாதை செலுத்தினார்.
அதிமுகவில் இருந்து நீக்கபட்டாலும் தனக்கு அடையாளம் கொடுத்த அதிமுக தலைவர்களை மறக்க முடியாது எனக் கூறி வருகிறார் செங்கோட்டையன். கோபி செட்டி பாளையத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்திலும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படங்களுடன் போர்டு வைத்து இருந்தார். இதற்கு அதிமுகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
மாலை அணிவிக்க மறுப்பு
இந்த நிலையில்தான், தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்பு செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன், இன்று மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இதற்காக கார் மூலமாக மேட்டுப்பாளையத்திற்கு செங்கொட்டையன் வந்து கொண்டிருந்தார். அப்போது சிறுமுகை பெத்திக்குட்டை பகுதியில் செங்கோட்டையனுக்கு தவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, அங்கு இருந்த எம்.ஜி.ஆர் சிலைக்கு தவெகவினர் மற்றும் செங்கொடையன் மாலை அணிவிக்க சென்றனர். ஆனால் இந்த சிலை அதிமுக சார்பில் அமைக்கப்பட்டது என்பதால், தவெகவினர் மாலை அணிவிக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் செங்கோட்டையன் மாலை அணிவிக்க முடியாதபடி, சிலைக்கு பூட்டு போட்டு சென்றனர்.
செங்கோட்டையன் அதிர்ச்சி
இதனால், செங்கோட்டையன் ஏமாற்றம் அடைந்தார். சரி அங்கேதான் இப்படி என்றால், மேட்டுப்பாளையத்தில் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது செங்கோட்டையனுக்கு.. அதாவது மேட்டுப்பாளையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க செங்கொட்டையன் சென்றார்.
ஆனால், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க தவெகவினர் அனுமதி பெறாததால் அண்ணா சிலையும் பூட்டப்படு இருந்தது. இதனைத்தொடர்ந்து அண்ணா சிலை முன்பாக அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த அண்ணா புகைப்படத்திற்கு செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் செங்கோட்டையன் பங்கேற்றார்.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம்.. அர்ச்சகர் பூஜை செய்ய தடை.. 2 காவலாளிகள் சஸ்பெண்ட்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications