எடப்பாடி பழனிசாமியை விட எஸ்பி வேலுமணி புத்திசாலி.. கோர்த்துவிட்ட ஓபிஎஸ் டீமின் புகழேந்தி!
கோவை: கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, "எஸ்.பி.வேலுமணி நல்ல ஃபீல்டு வொர்க்கர். எடப்பாடி பழனிசாமியை விட வேலுமணி புத்திசாலி." எனக் கூறியுள்ளார்.
கோவை சௌரிபாளையம் பகுதியில் அதிமுக ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரண்டு மூன்று நாட்களாக காமெடியாக, கைதட்டல், விசில் என போகிறது. சிங்கக் கூட்டம், சிறு நரி கூட்டம் என பல டயலாக் பேசினார்கள். கூட்டணி முடிந்துவிட்டது என்றும் சொன்னார்கள். கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஜெயக்குமாரும் கூட்டணி முறிந்து விட்டது எனச் சொல்லிவிட்டார்.

ஜெயக்குமார் கொடுத்த ஸ்டேட்மென்டிற்கு எதிராக, கட்சிக்காரர்களை அமைதியாக இருக்க எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்டார். ஜெயலலிதா என்ற ஆளுமையை விட எனது தாய், மனைவி உயர்த்தவர்கள், அண்ணா ஓடி ஒளிந்தார் என பேசுகிறார் அண்ணாமலை. இரு சாதிகளை தூண்டிவிடும் வேலையை அவர் செய்கிறார். ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் தங்களது நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள கூடாது. எடப்பாடி பழனிசாமி இப்போது எல்லாரையும் வாயை மூட சொல்லிட்டார்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி உறுதிப்படுத்த வேண்டும். இதில் ஏன் அமைதியாக இருக்கிறார்? அப்படி உறுதிப்படுத்தினால் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு போவார். கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஏன் எடப்பாடி பழனிசாமி மீது இதுவரை தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரியவில்லை.
எஸ்.பி.வேலுமணி நல்ல ஃபீல்டு வொர்க்கர். எடப்பாடி பழனிசாமியை விட வேலுமணி புத்திசாலி. எடப்பாடி பழனிசாமி மீது ஏராளமான வழக்குகள் இருக்கின்றன. ஆனால் அவற்றின் மீது மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை" என பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications