பென்ஷனில் அதிரடி.. பட்டா மாறுதலுக்கு சூப்பர் வாய்ப்பு.. கோவையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்.. அருமை
கோவை: தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. இந்த முகாம்களில் அந்தந்த பகுதி மக்கள் பங்கேற்று, அரசின் பல்வேறு திட்டங்களுக்கு மனு வழங்கிவருகிறார்கள்.. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை பெற பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.. அந்தவகையில் இன்றைய தினம் கோவையில் முகாம் நடைபெற உள்ளது.. இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்..
கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் கடலூர் மற்றும் சிதம்பரம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, "உங்களுடன் ஸ்டாலின்" என்ற முகாமினை திறந்து வைத்தார்.

இந்த முகாம் மூலம், ஆதார் அட்டையில் பெயர் மாற்றம்,ரேஷன் கார்டுகளில் முகவரி மாற்றம், பட்டா பெயர் மாற்றம், மருத்துவ காப்பீடு விண்ணப்பிப்பது லிட்டர் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் ஸ்டாலின் கூறியிருந்தார்..
உங்களுடன் ஸ்டாலின் - பலத்த வரவேற்பு
மேலும், இந்த திட்டம் மூலம் சாதிச்சான்றிதழ், , பட்டா மாற்றம் செய்ய, பென்ஷன் வாங்க, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன் பெற, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய, ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்வது போன்ற பணிகளுக்கு அரசு அலுவலர்களே நேரடியாக மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வந்து தீர்வுகளை வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் முகாம்
இதையடுத்து, உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது இந்த முகாமில் மகளிர்கான உரிமை தொகை திட்டத்தின் விண்ணப்பங்கள் தீவிரமாக பரிசளிக்கப்பட்டு வருகிறது. அதாவது, விண்ணப்பதாரர்களுக்கு வெறும் 10 நிமிடங்களிலேயே அனைத்து பணிகளும் முடித்து தரப்படுகிறதாம்.. எனவே, இந்த திட்டத்தால் பொதுமக்கள் நேரடியாகவே பலன்களை பெற்று வருகின்றனர்.
அந்தவகையில், கோவை மாவட்டத்திலும் முகாம் நடந்து வருகிறது. இது குறித்து வெளியாகியிருக்கும் அறிவிப்பில், "அரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கு அருகே சென்று வழங்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 336 முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மொத்தம் 120 முகாம்கள் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெறுகிறது.
பென்ஷன் வாங்கணுமா
இந்த திட்டம் மூலம் சாதி சான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன் பெற, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய, ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்வது போன்ற பணிகளுக்கு அரசு அலுவலர்களே நேரடியாக மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வந்து தீர்வுகளை வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முகாம் இன்று (29.7.25) கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 77 மற்றும் 78யை சேர்ந்த மக்கள் பலனடையும் படி செல்வபுரம் ராமமூர்த்தி சாலை பகுதியில் உள்ள ஆர்.ஆர்.மஹால், திருமண மண்டபத்தில் நடைபெறும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications