கோவை அருகே முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு அச்சத்தால் டாக்டர் ராசி தூக்கிட்டு தற்கொலை!
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்த டாக்டர் ராசி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காட்டூர் பகுதியை சேர்ந்தவர் செந்தாமரை.பெண் மருத்துவர்.இவரது கணவர் ரங்கராஜன்.இவர்கள் அதே பகுதியில் மருத்துவமனை ஒன்றினை நடத்தி வருகின்றனர். இத்தம்பதியின் மகள் ராசி(26) எம்.பி.பி.எஸ் முடித்து அதே கிளினிக்கில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

மருத்துவர் ராசிக்கும்,தொழிலதிபர் அபிஷேக் (27) என்பவருடன் திருமணமாகி மேட்டுப்பாளையம் கோ-ஆப்பரேட்டிவ் காலனியில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் மருத்துவர் ராசி மருத்துவ மேல் படிப்பில் (MD) சேருவதற்கான நீட் தேர்விற்காக கடந்த 3 மாதங்களாக தயாராகி வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த பதினைந்து நாட்களாக தனது தாய் வீட்டில் உள்ள 3-வது மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்து தீவீரமாக நீட் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் மருத்துவர் ராசியின் அறை கதவு நேற்று நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து பெற்றோர்கள் அறைக்கு சென்று பார்த்த பொழுது மருத்துவர் ராசி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.அவரை கீழே இறக்கி அவரை பரிசோதித்த பொழுது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
நீட் தேர்வுக்கான தயாரிப்பில் ஏற்பட்ட கடினமான மன அழுத்தம் காரணமாக மருத்துவர் ராசி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும்,இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமாகி 6 மாதங்களே ஆகியுள்ள நிலையில் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது. பல உயிர்களை காப்பாற்ற வேண்டிய மருத்துவரே மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications