சீரியல் நடிகை ஹோம் டூர் செய்த கோவை வீடு.. இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பிசியோதெரபிஸ்ட்
கோவை: கோவை மாவட்டத்தில் 23 வயதான இளம்பெண்ணுக்கு டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 68 வயதான பிசியோதெரபிஸ்ட் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கோவையையே அதிரவைத்துள்ளது. தலைமைறைவாகி இருந்த பிசியோதெரபிஸ்டை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாடு முழுவதும் பெண்கள் எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் ஓய்வதற்குள் மகாராஷ்டிர மாநிலம் தானேவில் 4 வயது சிறுமிகள் இருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகினர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பொதுமக்கள் போராட்டமாக வெடித்தது. அதைத்தொடர்ந்து, இந்தியாவில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. வீடு, பள்ளி, கல்லூரி என எந்தப் பகுதியும் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான பகுதியல்ல என்பது போல் சூழல் மாறி வருவது பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், சொகுசு பங்களாவில் வேலைக்காகச் சென்ற 23 வயதான கட்டடக் கலை நிபுணரை, டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பிசியோதெரபிஸ்ட் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிசியோதெரபிஸ்டை கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், மருதமலை சாலையில் உள்ள ஐஓபி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். 68 வயது மதிப்புள்ள பிசியோதெரபிஸ்டான இவரது மனைவி குழந்தைகள் நல மருத்துவராக உள்ளார். இத்தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் மருதமலை அடிவாரத்தில் சொகுசு பங்களா ஒன்றைக் கட்டி வருகின்றனர்.
பங்களாவின் கட்டுமானப் பணிக்காக 23 வயது பெண் கட்டடக் கலை நிபுணரிடம் பணிகளை ஆனந்த கிருஷ்ணன் ஒப்படைத்துள்ளார். கட்டடப் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், ஆனந்த கிருஷ்ணன் மரியாதை நிமித்தமாக அந்தப் பெண்ணை வீட்டுக்கு அழைத்துள்ளார். அப்போது, அவரது வீட்டில், ஆனந்த கிருஷ்ணனின் மனைவி, மகன் உள்ளிட்ட எல்லோரும் வெளியில் சென்றிருந்ததால் யாரும் இல்லை.
இதையடுத்து, ஆனந்த கிருஷ்ணன் அந்த இளம்பெண்ணுக்கு டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். இதுகுறித்து தெரியாமல் அந்த இள்பெண்ணும் டீயை குடித்து உடனயே மயக்கமடைந்துள்ளார். அதன் பின்னர் ஆனந்த கிருஷ்ணன் அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நினைவு திரும்பிய நிலையில் தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து அப்பெண்ணுக்குத் தெரியவந்த நிலையில் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆனந்த கிருஷ்ணன் மீது புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையறிந்த ஆனந்த கிருஷ்ணன் தலைமறைவாகிவிட்டார். போலீஸ் விசாரணையில் ஆனந்த கிருஷ்ணன், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இடுக்கி மாவட்டம் சென்ற கோவை போலீஸார் ஆனந்த கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனந்த கிருஷ்ணனின் வீட்டை பல பிரபலங்கள் பார்வையிட்டுள்ளனர். அந்த வகையில், சமீபத்தில் பிரபல சீரியல் நடிகை சுஜிதா, ஆனந்த கிருஷ்ணனின் வீட்டுக்குச் சென்று ஹோம் டூர் வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மருதமலை வனப் பகுதிக்கு மிகவும் அருகில் உள்ள அந்த வீட்டில் ஆனந்த கிருஷ்ணன் ஏர்கன் பயன்படுத்தியது அந்த வீடியோவில் சர்ச்சைக்குள்ளானது.












Click it and Unblock the Notifications