கோவை பில்லூர் அணை திறப்பு! பவானி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கோயம்புத்தூர்: தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளதால், தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில் கோயம்புத்தூரின் பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் திறக்கப்படுகிறது.
பில்லூர் அணை நள்ளிரவு திறக்கப்படுவதால் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக பில்லூர் அணை இருக்கிறது. இந்த அணையின் மொத்த உயரம் 100 அடி. இதில் 97.5 அடியை நீர் எட்டினால் உடனடியாக பவானி ஆற்றில் நீர் திறந்து விடப்படும். கடந்த சில நாட்களாக 70 அடிக்கும் குறைவாக இந்த அணையில் நீர் இருந்து வந்த நிலையில் மழை காரணமாக 24ம் தேதி அணையின் நீர் மட்டம் 78 அடி உயர தொடங்கியது. அதேபோல நேற்று முன்தினம் இரவு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது.
எனவே அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 86 அடியாக உயர்ந்தது. அதேபோல அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 3 கனஅடி என்கிற அளவில் இருந்தது. இதே வேகத்தில் தண்ணீர் வந்தால் நிச்சம் அணை முழு கொள்ளளவை எட்டிவிடும் என்று கருதப்பட்டிருந்தது. நீர் வரத்து அதிகரித்ததால் மின் உற்பத்திக்கு விநாடிக்கு 6,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டிருந்தது. எனவே பவானி ஆற்றில் யாரும் இறங்கவோ, துணி துவைக்கவோ, குளிக்கவோ கூடாது என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது அணை முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது. எனவே அணையிலிருந்த நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அணையின் 2 மதகுகள் திறக்கப்படும் என்பதால் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல கோவையின் மற்றொரு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவானி அணையும் வேகமாக முழு கொள்ளளவை எட்டி வருகிறது. அணையின் உயரம் 50 அடியாக இருந்தாலும், அணையின் பாதுகாப்பு கருதி 44.61 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்படுகிறது. நேற்று முன்தினம் அணையின் நீர் மட்டம் 19 அடியாக இருந்த நிலையில், நேற்று காலை 21.55 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. நாளையும் கோவையில் கனமழை பெய்யும் என்பதால் அணையின் நீர் மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications