கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்.. முபினின் உறவினர் இரவோடு இரவாக கைது

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 6ஆவதாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு வழியாக கடந்த 23 ஆம் தேதி அதிகாலை 4.10 மணிக்கு சென்ற கார் ஒன்று சங்கமேஸ்வரர் கோயில் முன்பு வேகத்தடையை கடந்த போது திடீரென வெடித்து தீப்பிடித்தது.

இந்த காரில் இரு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருந்ததும் அந்த தீவிபத்தில் காரை ஓட்டிவந்த உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்ததும் தெரியவந்தது.

உதிரிபாகங்கள்

உதிரிபாகங்கள்

சம்பவ இடத்தில் சிதறி கிடந்த காரின் உதிரிபாகங்கள், அங்கு சிதறிக் கிடந்த ஆணிகள், கோலிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த முபினின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அங்கு நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்கள், வயர்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

முபின் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் 22 ஆம் தேதி இரவு 11.25 மணிக்கு முபினின் வீட்டில் இருந்து முபின் மற்றும் மேலும் 5 பேர் ஒரு பெரிய மூட்டையை தூக்கி சென்று காரில் ஏற்றும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அவை வெடி பொருட்களா, அவற்றை எங்கே ஏற்றிச் சென்றனர் என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முபின்

முபின்

இந்த நிலையில் முபினுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் என விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம். நகரை சேர்ந்த முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேர் முபினின் வீட்டில் இருந்து மூட்டையை தூக்கிச் சென்றவர்கள்.

மேலும் ஒருவர் கைது

மேலும் ஒருவர் கைது

கார் வெடிப்பில் உயிரிழந்த முபின், முகமது அசாருதீனின் நெருங்கிய கூட்டாளியாவார். முகமது அசாருதீன் 2019 ஆம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் ஆவார். இந்த நிலையில் இந்த வழக்கில் 6ஆவதாக அஃப்சர்கான் என்பவரை இரவோடு இரவாக போலீஸார் கைது செய்தனர். இவர் முபினின் உறவினராவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+