"வீடியோ காலில் ஒட்டுத் துணியில்லாமல் வா".. பிளஸ் 1 மாணவியை நச்சரித்த சிறுவன்.. அடுத்து நடந்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை காதலித்த சிறுவன் அந்த மாணவியை வீடியோ காலில் நிர்வாணமாக வர சொல்லி அதை ரெக்கார்டு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த ஆண்டு இவருடன் படித்த ஒரு மாணவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவன் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என தெரிகிறது. இதனால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.

மாணவியுடன் காதல்

மாணவியுடன் காதல்

எனினும் அந்த மாணவியுடனான காதலை விடவில்லை. தினந்தோறும் மணிக்கணக்கில் செல்போனில் இருவரும் பேசுவதையே வாடிக்கையாக வைத்திருந்தனர். ஒரு கட்டத்தில் அந்த மாணவன், மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த மாணவி, அந்த சிறுவனுடன் போனில் பேசி வந்தார்.

தொழில்நுட்ப வளர்ச்சி

தொழில்நுட்ப வளர்ச்சி

இந்த நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த நிலையில் நமது காதலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக வீடியோ காலையும் இவர்கள் பயன்படுத்தி தங்கள் காதலை வளர்த்துள்ளதாக தெரிகிறது. அப்போது ஒரு கட்டத்தில் மாணவியை நிர்வாண கோலத்தில் பார்க்க அந்த சிறுவன் விரும்பியது தெரியவந்தது.

மாணவி மறுப்பு

மாணவி மறுப்பு

ஆனால் அந்த மாணவியோ மறுப்பு தெரிவித்துவந்தார். தினமும் அந்த மாணவன் நிர்வாணமாக வர சொல்வதும் அதற்கு அந்த மாணவி மறுப்பதும் வாடிக்கையாக இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் மாணவன் மிகவும் தொல்லை கொடுத்தார். இதனால் அந்த மாணவியும் நிர்வாணமாக வீடியோ காலில் வந்து பேசியுள்ளார்.

மாணவிக்கே தெரியாது

மாணவிக்கே தெரியாது

அந்த காட்சிகளை மாணவிக்கே தெரியாமல் அந்த சிறுவன் பதிவு (ரெக்கார்டு) செய்தது தெரியவந்தது. இருவரும் தொடர்ந்து பழகி வந்தனர். மீண்டும் நிர்வாணமாக வீடியோ காலில் வருமாறு அந்த சிறுவன் அழைத்தான். ஆனால் மாணவியோ அதெல்லாம் முடியாது, நான் வரமாட்டேன் என பிடிவாதமாக கூறிவிட்டார்.

மறுத்த மாணவி

மறுத்த மாணவி

மீண்டும் மீண்டும் கேட்டு பார்த்துவிட்டு மாணவி முடியாது என கூறியதால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் "ஏற்கெனவே ஒரு முறை நிர்வாணமாக வந்து பேசியதை நான் வீடியோ காலின் போது ரெக்கார்டு செய்திருக்கிறேன். இப்போது மீண்டும் வராவிட்டால் அந்த வீடியோவை உன் அப்பா, அம்மாவுக்கு அனுப்பிவிடுவேன்" என மிரட்டியுள்ளார்.

வீடியோ அனுப்பிய சிறுவன்

வீடியோ அனுப்பிய சிறுவன்

சிறுவன் தான் நிர்வாணமாக மீண்டும் வருவதை பார்ப்பதற்காக பொய் சொல்கிறார் என நினைத்து இது போல் பொய் சொல்லி என்னை ஏமாற்றாதே என கூறியுள்ளார். அடுத்த நிமிடமே மாணவியின் செல்போனுக்கு அவர் நிர்வாணமாக பேசிய வீடியோ காட்சிகளை அந்த சிறுவன் அனுப்பி வைத்துள்ளார்.

பதறிய மாணவி

பதறிய மாணவி

இதனால் பதறி போன அந்த மாணவி நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்களும் மாணவியை கண்டித்துவிட்டு சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். அந்த மாணவி தான் காதலித்த சிறுவனின் பெயரை தவிர வேறு எந்த தகவலையும் அறியாமல் இருந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுவன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+