கேட்டது ஒரு லட்சம்.. கிடைச்சது வழக்கு.. கோவையில் பிரியாணி போட்டிக்கு வந்து சிக்கிய பரிதாபம்
கோவை: அரை மணி நேரத்தில், ஆறு சிக்கன் பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என கோவை தனியார் ஹோட்டல் நிர்வாகம் அறிவித்தது. இதில் பங்கேற்க ஏராளமானவர்கள் வந்ததால், ரயில் நிலைய சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸ் அந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவை ரயில்நிலையம் முன்பு, ரயில் பெட்டி வடிவத்தில் ஹோட்டல் திறக்கப்பட்டிருந்தது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த செம்மனூர் நகைக்கடை உரிமையாளர் பாபி செம்மனூர் என்பவர்தான் குத்தகைக்கு எடுத்து ஹோட்டல் தொடங்கியுள்ளார். அவர் சமீபத்தில் வெளியிட்டிருந்த வீடியோவில் சிக்கன் பிரியாணி சேலஞ்ச் குறித்து பகிர்ந்திருந்தார். அதாவது அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு என்றும், நான்கு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஐம்பதாயிரம் பரிசு என்றும், மூன்று பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு என்றும் அறிவிக்கப்பட்டிருந்திருந்தார்.

இன்று மதியம் 1 மணி முதல் 4 மணி வரை இந்தப் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எந்த கட்டணமும் இல்லை. இலவசமாக கலந்து கொள்ளலாம் என்று கூறியிருந்தார். இதன் காரணமாக கோவை மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஹோட்டலில் குவிந்தனர். கோவை ரயில்நிலையம் பகுதி ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் அவர்கள் தங்களின் பைக் மற்றும் கார்களை, ரயில்நிலைய சந்திப்பு முன்பே நிறுத்தினர். இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அந்த வழியாக சென்ற மக்கள் கோபமடைந்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். மறுபக்கம் ஹோட்டலில் தமிழகம் கேரளாவைச் சேர்ந்த பொதுமக்கள் யூடியூபர்களால் கூட்டம் நிரம்பி வழிந்தது. உணவுப் போட்டியில் கலந்து கொண்டவர்கள் சேலஞ்சை வெற்றிகரமாக முடிக்க முடியாமல் திணறினர்.
போட்டியில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், சாதாரணமாக ஹோட்டலில் கொடுக்கப்படும் ஒரு பிரியாணி அளவை போல், மூன்று மடங்கு இருந்தது. இதனால் அதிகம் உட்கொள்ள முடியவில்லை இதேபோல சிக்கன் பிரியாணி பாத்திரத்தில் அதிகளவு உணவை அமுக்கி வைத்து கொடுத்ததால் சாப்பிட முடியவில்லை. என்று வருத்தப்பட்டனர்.
இலவசமாக இளைஞர்களை கவரும் வகையில் போட்டி நடத்துவதால், ஹோட்டல் எளிதாக சென்றடையும் என்ற வியாபார யுக்தியின் அடிப்படையில் இந்த போட்டி நடத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications