Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'மேட்ரிமோனி ஆப்' மோசடி.. 2 முறை திருமணமான சேலம் பிரியாவின் கைவரிசை.. செக் வைத்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: திருமணத்துக்காக வரன்கள் பார்க்கப் பயன்படுத்தப்படும் 'மேட்ரிமோனி' செயலியைப் பயன்படுத்தி ஏற்கனவே இரண்டு முறை திருமணமான பெண் ஒருவர் பல ஆண்களிடம் பல லட்சக்கணக்கிலான ரூபாயை மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் 32 வயதான விவசாயி. இவர் திருமணத்துக்காக வரன்களைத் தேடி வந்துள்லார். மேட்ரி மோனி ஆப்பில் தனது அனைத்து விவரங்களையும் திருமணத்துக்காக பதிவு செய்துள்ளார். இந்நிலையில், நாமக்கல்லைச் சேர்ந்த பிரியா என்ற பெண் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அந்த விவசாயிக்கு அறிமுகமாகியுள்ளார்.

coimbatore crime

பின்னர், அந்த விவசாயியும், பிரியாவும் செல்போனில் பேசி தங்களுடைய குடும்பம் பற்றி விசாரித்துள்ளனர். இருவரு்கும் பிடித்துப் போயுள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர். ஒருமுறை செல்போனில் பேசும்போது, பிரியா தனது அக்காவுக்கு மிகவும் உடல் நலம் சரியில்லை என்றும், அவருடைய மருத்துவச் செலவுக்கு பணம் வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

தான் திருமணம் செய்து கொள்ளும் பெண் தானே கேட்கிறார் கொடுக்கலாம் என்று நினைத்து அந்த நபரும் பிரியா கேட்கும் போதெல்லாம் பணத்தை டிரான்ஸ்பர் செய்து வந்துள்ளார். ஆகஸ்ட் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சுமார் ரூ. 7.12 லட்சத்தை விவசாயி, பிரியாவுக்கு கொடுத்துள்ளார்.

இது ஒருபக்கம் தொடர்ந்து வந்த நிலையில், பொள்ளாச்சி விவசாயி, பிரியாவிடம் திருமணம் எப்போது செய்து கொள்ளலாம் என்று கேட்கும் போதெல்லாம் அதனை தட்டிக் கழித்தே வந்துள்ளார் பிரியா. ஒருகட்டத்தில் விவசாயியுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார் பிரியா. இதையடுத்து, அவருடைய வீட்டிற்கு அதாவது நாமக்கல் முகவரிக்குச் சென்று பார்த்தபோது, அப்படி ஒரு குடும்பம் அங்கு இல்லவே இல்லை என்பது தெரியவந்துள்ளது.

பிரியா போலியான முகவரியை கொடுத்து தன்னை ஏமாற்றியதை அறிந்த விவசாயி அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அவர் உடனடியாக கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விவசாயி பிரியாவுக்கு பணம் அனுப்பிய வங்கிக் கணக்கு எண்ணை வைத்து சோதனை செய்தனர்.

அதில், பிரியா சேலம் மாவட்டம், வாழப்பாடியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சேலத்துக்கு விரைந்த போலீஸார் பிரியாவை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையில், பிரயாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமானது தெரியவந்தது. அவரின் முதல் கணவர் இறந்துவிட்ட நிலையில் இரண்டாம் கணவரிடம் இருந்து பிரிந்து தற்போது சுதாகர் என்பவருடன் வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.

பிரியா மேட்ரிமோனியில் தனது விவரங்களைப் பதிவு செய்து, அதில் விருப்பம் தெரிவிக்கும் நபர்களை குறிவைத்து மோசடி செய்து வந்ததாக பிரியா போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியைச் சேர்ந்த விவசாயி மட்டுமல்லாமல் பல ஆண்களிடம் பல லட்சம் ரூபாயை பிரியா மோசடி செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீஸார் பிரியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+