நெருங்கும் லோக்சபா தேர்தல்.. கோவையில் தபால் வாக்குகளை செலுத்த காவல்துறையினர் தீவிரம்!
கோயம்புத்தூர்: தமிழகத்தில் வருகிற 19ம் தேதி லோக்சபா தேர்தல் தொடங்குகிறது. இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் அஞ்சல் ஓட்டு செலுத்தி வருகின்றனர்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி 22 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் தமிழகமும் ஒன்று. தமிழகத்தில் 39 தொகுதிகளும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடக்கிறது. எனவே, வேட்பாளர்கள் தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரம் தேர்தல் பணிக்காக ஏராளமான காவலர்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் காவலர்களுக்கான தபால் ஓட்டு தொடங்கியிருக்கிறது.

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள காவலர்கள் சமுதாயக் கூடத்தில் காவலர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு தொடங்கியது. கோவையில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் இன்றும், நாளையும், தங்களது அஞ்சல் வாக்கை செலுத்த இருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து கோவை,பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்டவர்கள் கோவை உப்பிலிபாளையம் காவலர் சமுதாயக்கூடத்திலும் மற்ற தொகுதிகளுக்கு உட்பட்டவர்கள் அதற்கு எதிரேயுள்ள சிஎஸ்ஐ பள்ளியிலும் வாக்களிக்க மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் நேரில் வந்து அஞ்சல் வாக்கு செலுத்தி விட்டு செல்கின்றனர். வாக்குப்பதிவானது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
தமிழகத்தில் கோவை தொகுதி நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது. தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை, இந்த தொகுதியின் எம்.பி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். ஏற்கெனவே தமிழக அரசு மீது ஏகத்துக்கும் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்த இவர் மீது, ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை என்று விமர்சனம் இருந்து வருகிறது.
எனவே, இந்த தேர்தல் இவருக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. மட்டுமல்லாது கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்ததால் 4 சட்டமன்ற தொகுதிகளை பாஜகவால் கைப்பற்ற முடிந்தது. இந்த முறை அதிமுக தனித்து களம் காண்கிறது என்பதால் பாஜகவுக்கு இத்தேர்தல் கூடுதல் சவாலானதாக இருக்கிறது.
அதேபோல மறுபுறும் திமுகவுக்கும் கோவை தொகுதி மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இங்கு பணியாற்றி வந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை மூலம் பாஜக தட்டி தூக்கியது. இப்போதுவரை அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. எனவே இதற்கு பழிதீர்க்க கோவையில் திமுக நேரடியாக களமிறங்கியுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் இந்த தொகுதி கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியிருந்தது.
அந்த வகையில் கோவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக பார்க்கப்படுகிறது. இங்கு திமுக சார்பில், கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார்.
இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம், திமுகவினர் மீது தாக்குதல், திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முயன்ற திருமுருகன் காந்தி தடுத்து நிறுத்தம், என கோவை அரசியல் சூட்டில் தகித்து வருகிறது. இதனை தணிக்க கூடுதல் போலீசார் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த போலீசார்தான் தற்போது தபால் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications