Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொள்ளையன் விஜய்க்கு ரன்னிங், ஜம்பிங் தெரிந்ததால் பிடிப்பது சவாலாக இருந்தது.. போலீசார் பரபர தகவல்!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த விஜய் ரன்னிங், ஜம்பிங்கில் திறமை வாய்ந்தவராக இருந்ததால் அவரை பிடிப்பது காவல்துறைக்கு சவாலாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் செயல்பட்டு வரும் பிரபலமான ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கடந்த நவம்பர் 27ஆம் தேதியன்று இரவில் நூற்றுக்கணக்கான பவுன் தங்க மற்றும் வைர நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளை போன நகைகள் 4.6 கிலோ, அதாவது 575 சவரன் எனக் கூறப்பட்டது. பிரபல நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, கோவை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Police teams had tough job because robber expertise in running and jumping

காவல்துறையினர் தனிப்படை அமைத்து சிறப்பான விசாரணை மேற்கொண்டதன் விளைவாக நகையை கொள்ளையடித்த நபர் தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த விஜய் என்பதும், அவர் கொள்ளையடித்த 460 பவுன் நகையில் 320 பவுன் நகையை அரூர் பகுதியில் உள்ள அவரது மனைவி நர்மதாவிடம் கொடுத்துவிட்டு தலைமறைவானது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த நகைகள் மீட்கப்பட்டது.

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையடிக்க ஸ்கெட்ச் போட்டது, நகைகளை மறைத்து வைத்து, தப்பிச் செல்ல உதவியது என விஜய்க்கு அவரது மனைவி நர்மதா மூளையாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. விஜய்யின் மாமியார் பதுக்கி வைத்திருந்த சுமார் 1 கிலோ நகைகளையும் போலீசார் மீட்டனர். தொடர்ந்து, கொள்ளையன் விஜய்யை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த விஜய்யை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய துணை காவல் ஆணையாளர் சந்தீஷ், "கோவையில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக ரத்தினபுரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியை தேடும் பணி நடந்து வந்தது.

கோவை நகரப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 300 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், கொள்ளையில் ஈடுபட்டது தருமபுரியைச் சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையனை தேடும் பணி வேகப்படுத்தப்பட்டது. இதில் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் தங்கி இருந்த விஜய்யின் மனைவி நர்மதா கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்த 3 கிலோ தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதே போல் தருமபுரியில் இலங்கை அகதிகள் முகாமில் இருந்த விஜய்யின் மாமியார் யோகா ராணி கைது செய்யப்பட்டு, அவர் மறைத்து வைத்திருந்த 1.2 கிலோ நகைகள் மீட்கப்பட்டன. தொடர்ச்சியாக விஜய்யின் நடமாட்டத்தை கண்காணித்த தனிப்படையினர், ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருந்து சென்னைக்கு வருவதை கண்டுபிடித்தனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு செல்போன் கடையில் சிம்கார்டு வாங்குவதற்காக முயற்சி செய்த விஜய்யை தனிப்படையினர் கைது செய்தனர்.

கடந்த 14 நாட்களாக விஜய்யின் நடமாட்டத்தை தொடர்ச்சியாக கண்காணித்து வந்தது தனிப்படை. ஆனால் அவனிடம் செல்போன் உள்ளிட்ட எந்த தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாததால் தேடுவதில் பின்னடைவு ஏற்பட்டது. எனினும் கைரேகை பதிவுகள், நவீன தொழில்நுட்ப உதவியுடன் விஜய்யின் நடமாட்டம் கண்டறியப்பட்டதாக கூறினார். விஜய்யை பிடிக்கும் பணியில் 48 காவலர்கள் அடங்கிய ஐந்து தனிப் படைகள் இரவு பகலாக ஈடுபட்டதாக தெரிவித்தார்.

எந்தவித துணையும் இன்றி தற்செயலாக நகைக்கடையில் புகுந்து விஜய் கொள்ளை அடித்ததும் விசாரணையில் தெரிய வந்தது. கோவை மாநகரில் அதிக மதிப்புடைய பொருட்களை விற்பனை செய்யும் நகை கடைகள், செல்போன் கடைகள், கை கடிகார கடைகள் ஆகிய உரிமையாளருடன் நடத்தப்பட்ட கூட்டத்தில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த அறிவுறுத்தப்பட்டது.

பழைய கேமராக்களை மாற்றி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கேமராக்கள் பொருத்தவும், சென்சார் வசதியுடன் கூடிய வைப்ரேஷன் மற்றும் மோசன் சென்சார் வசதியுடன் கூடிய கேமராக்களையும் பொருத்தவும் அறிவுறுத்தியுள்ளது. மொத்தம் 5.15 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதில் 5.12 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

கொள்ளையன் தருமபுரியில் மலை மற்றும் காடுகளை ஒட்டிய பகுதியில் பிறந்து வளர்ந்ததாலும், அவர் ஓடுதல், தாண்டுதல் உள்ளிட்டவற்றில் திறமை வாய்ந்தவராக இருந்ததாலும் அவரை தருமபுரியில் வைத்து பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது, 3 நாட்களில் அந்தப் பகுதியை விட்டு வெளியேறி தொடர்ந்து பயணம் செய்து சென்னை வந்த நிலையில் தனிப்படையினர் கைது செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+