• search
கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெட்ரோல் குண்டு வீசியவர்கள் அடையாளம் காணப்பட்டனர்- குண்டாஸ் பாயும்- கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன்

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

திமுக மூத்த தலைவர் ஆ.ராசா, இந்துக்களை மனுஸ்மிருதி இழிவாக எப்படி எல்லாம் வகைப்படுத்தி இருக்கிறது என விவரித்துப் பேசினார். அவரது இந்த பேச்சு, இந்துக்களுக்கு எதிரானது; இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது என்றனர் பாஜகவினர்.

5 ஆண்டுகளுக்கு முன் தொலைத்த 'நோஸ் ரிங்'..கண்டுபிடிக்கப்பட்ட இடம் தான் அல்டிமேட்..மருத்துவர்கள் ஷாக்! 5 ஆண்டுகளுக்கு முன் தொலைத்த 'நோஸ் ரிங்'..கண்டுபிடிக்கப்பட்ட இடம் தான் அல்டிமேட்..மருத்துவர்கள் ஷாக்!

 ஆ.ராசா விவகாரம்

ஆ.ராசா விவகாரம்

மனுஸ்மிருதியில் இந்துக்கள் இழிவுபடுத்தப்பட்டுள்ளதைக் கண்டிக்காத பாஜகவினர், அதை சுட்டிக்காட்டிப் பேசிய ஆ.ராசாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். ஆ.ராசாவின் நாக்கை அறுப்போம் என கொலை மிரட்டல் விடுத்தனர். இப்படி சட்டவிரோதமாக மிரட்டல் விடுத்த பாஜகவினர் கோவையிலும் கைது செய்யபப்ட்டனர். அதே நேரத்தில் கோவை உள்ளிட்ட பல இடங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் வீடுகள், அலுவலகங்கள், அறக்கட்டளை இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. தேசிய புலனாய்வு ஏஜென்சியும் அமலாக்கப் பிரிவும் இணைந்து இந்த சோதனை நடத்தி பலரையும் கைது செய்தனர்.

 கோவை போலீசார் தீவிரம்

கோவை போலீசார் தீவிரம்

இந்நிலையில் கோவை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பாஜக, இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கார்கள், வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதனால் பல இடங்களில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இப்பதற்றத்தைத் தணிக்கும் நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகரில் காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர் மட்டுமின்றி சிறப்பு காவல் படை, தமிழ்நாடு காமாண்டோ படை, அதிவிரைவுப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். மொத்தமாக கோவை மாநகர காவலர்கள் மற்றும் வெளிமாவட்ட காவலர்கள் என மொத்தம் 4000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

 அதிரடி சோதனைகள்

அதிரடி சோதனைகள்

கோவை நகருக்குள் நுழையும் வழியில் 11 சோதனை சாவடிகள் தவிர, கூடுதலாக நகரில் 28 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. ஒரு காவல் நிலையத்திற்கு 3 ரோந்து வாகனங்கள் வீதம் 15 காவல் நிலையத்திற்கு 45 ரோந்து வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையம் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் இஸ்லாமிய இயக்கத்தின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடன் அமைதிக் கூட்டமும் போடப்பட்டது..

 கடும் நடவடிக்கை

கடும் நடவடிக்கை

பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் சுதாகர், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன், வீடியோ கான்பரன்ஸ் மூலம் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசணை மேற்கொண்டார். இந்த ஆலோசணை கூட்டத்திற்கு பிறகு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தலைமை செயலாளர் தலைமையில் 17 மாவட்ட உயரதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பான கூட்டம் நடைபெற்றது. கோவையில் தொடர் சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார். கோவை மாவட்டத்தில் நடந்த 7 சம்பவங்களில் உயிர் மற்றும் உடமைகள் சேதம் அடையவில்லை.
பொது மக்கள் பதட்டமோ, அச்சமோ பட வேண்டிய சூழல் இல்லை. சிடிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மத நல்லிணக்கத்திற்கான கூட்டங்கள் நடத்தி வருகிறோம். 94 ஜமாத் தலைவர்களுடன் கூட்டம் நடைபெற்றது. மாலை இந்து அமைப்புகளின் தலைவர்களுடன் கூட்டம் நடைபெற உள்ளது. வெடிகுண்டு வீச்சு நடைபெறவில்லை. இன்னும் ஒரிரு நாளில் தனிப்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றார்.

 குண்டர் சட்டம் பாயும்

குண்டர் சட்டம் பாயும்

இதையடுத்து பேசிய மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் , அனைத்து சம்பவங்களிலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இரு சக்கர வாகனங்கள் வேகமாக செல்வதால் பைக் எண்ணை சிசிடிவியில் கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது. ஒரு சில குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

English summary
Coimbatore Police Commissioner Balakrishnan said that we will take action against Petrol Bomb incidents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X