தொடுடா பார்க்கலாம்.. சனாதனம் உயிர் மூச்சு! கோவையில் போஸ்டர் யுத்தம்.. போட்டது பாருங்க போலீஸ் ஆர்டர்!
கோவை: சனாதன விவகாரம் தொடர்பாக கோவை மாவட்டத்தில் பாஜக மற்றும் திமுக இடையே போஸ்டரில் சண்டை நடைபெற்று வந்த நிலையில் சமூக மோதலை தூண்டும் வகையில் போஸ்டர்களை அடிக்கும் அச்சகங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை பேசிய பேச்சுகள்தான் தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

காவல் நிலையங்களில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக புகார்கள் குவிந்து கிடக்கின்றன. அது போல் கண்டனங்களும் எழுகின்றன. சனாதனத்தை டெங்கு, கொரோனா, மலேரியா போல் ஒழித்துக் கட்ட வேண்டும் என கூறியது இந்து அமைப்பினருக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது.
இந்த நிலையில்தான் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா உதயநிதி ஸ்டாலினின் தலையை சீவினால் ரூ 10 கோடி சன்மானம் என அறிவித்து, அவருடைய புகைப்படத்தை வாளால் ஆக்ரோஷமாக கிழித்த வீடியோவையும் வெளியிட்டிருந்தார். இதற்கு திமுகவினர் கொந்தளித்து விட்டனர்.
ஆனால் உதயநிதியோ கூலாக தலையை சீவ 10 கோடிக்கு எதற்கு 10 ரூபாய் சீப்பு போதும் என கிண்டலாக கூறியுள்ளார். இந்த நிலையில் மக்களிடம் கொலைவெறியை தூண்டும் விதமாக சாமியார் பேசி இருப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக உள்பட திராவிட இயக்கங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாநகர காவல் ஆணையர், காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றன.
இந்த நிலையில் இது தொடர்பாக சமூகவலைதளங்களில் சாமியாருக்கு கண்டனங்கள் குவிகின்றன. அது போல் சாமியார் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என இந்து அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் கோவை மாநகர் மாவட்ட திமுக மற்றும் பாஜகவினர் இது குறித்து பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
திமுக சார்பில் "போலிச்சாமியாரே 100 கோடி தரோம் தொடுடா பார்க்கலாம்" என ஒருமையில் இடம்பெற்ற வசனங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதற்கு பதிலடியாக பாஜகவினர் "சனாதனம் எங்கள் உயிர் மூச்சு" என்ற வாசகங்களுடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்கள் டவுன்ஹால், லங்கா கார்னர், ரயில் நிலையம் போன்ற இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் சாமியாருக்கு எதிராக உருவபொம்பை எரிப்பு போன்ற செயல்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இது போன்று வன்முறையை தூண்டும் விதத்தினாலான போஸ்டர்கள் போலீஸாரின் கவனத்திற்கு சென்றன. இதையடுத்து அவர்கள் இந்த செயல்களுக்கு கடிவாளம் போட்டுள்ளனர். அதாவது சமூக மோதலை தூண்டும் வகையில் போஸ்டர்களை அடிக்கக் கூடாது. அப்படியே யாராவது கொடுத்தாலும் அதை அடித்தால் அந்த அச்சகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்! -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு!












Click it and Unblock the Notifications