பொங்கி வழியும்.. பொள்ளாச்சி ஆழியார் அணை! கரையோர மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை
கோயம்புத்தூர்: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில். பொள்ளாச்சி ஆழியார் அணை முழு கொள்ளவை எட்டியிருக்கிறது. இதனால் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது. எனவே கரையோர மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருந்தது. ஆனாலும் மழை போதுமான அளவுக்கு பெய்யவில்லை. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் 50 சதவீதம் குறைவாகவும், கள்ளக்குறிச்சியில் 45 சதவீதம் குறைவாகவும், கிருஷ்ணகிரியில் 48 சதவீதம், மதுரையில் 84 சதவீதம், நாகப்பட்டினத்தில் 51 சதவீதம், ராமநாதபுரத்தில் 56 சதவீதம், திருப்பூரில் 71 சதவீதம், திருவாரூரில் 97 சதவீதம், திருச்சிராப்பள்ளியில் 86 சதவீதம், கரூரில் 95 சதவீதம், என மழை குறைவாகப் பெய்திருக்கிறது.

மொத்தமாக பார்த்தால் தமிழ்நாடு முழுவதும் ஜூன் 1ம் தேதி தொடங்கி இன்றைய தேதி வரையில் 103 மில்லி மீட்டர் அளவுக்கு சராசரியாக மழை பொழிதி இருக்க வேண்டும். ஆனால் 96.3 மில்லி மீட்டர் அளவுக்குதான் மழை பெய்து இருக்கிறது. எனவே இயல்பான மழையை காட்டிலும் 6 சதவீதம் மழை குறைவாக பெய்திருக்கிறது.
இருப்பினும் கொங்கு மாவட்டங்களில் குறிப்பாக கோயம்புத்தூரில் 56 சதவீதம் அளவுக்கு மழை இயல்பை விட அதிகமாக பெய்து இருக்கிறது. அதாவது ஜூன் 1ம் தேதி தொடங்கி இன்று வரை, மொத்தமாக 341.3 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் 533.7 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இது இயல்பை விட 56 சதவீதம் அதிகமாகும். அதேபோல திருநெல்வேலி மாவட்டத்தில் 255 சதவீதம் இயல்பை விட மழை அதிகமாக பெய்து இருக்கிறது.
கோயம்புத்தூரில் பெய்த கனமழை காரணமாக ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. அணையின் கொள்ளளவு மொத்தம் 120 அடியாகும். இது தற்போது முழு கொள்ளளவை எட்டி வருகிறது. எனவே அணையில் இருந்து 3 மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த அணைக்கு நீர் இரண்டு பகுதியிலிருந்து வருகிறது. ஒன்று மேல் ஆழியார் அணை. வால்பாறை பகுதியில் உள்ள இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து நீர் வருகிறது. இந்த அணையில் இருந்து நீர் நவமலை மின் நிலையம் வழியாக ஆழியார் அணைக்கு வருகிறது. அதேபோல பரம்பிக்குளம் அணையில் இருந்து கால்வாய் வழியாகவும் ஆழியார் அணைக்கு நீர் வருகிறது.
இது தவிர வால்பாறை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் போடும் காட்டார்களும் அனைத்து தேவையானவை கொண்டு வந்து சேர்க்கின்றன. தற்போது இந்த அணை நிரம்ப இருப்பதால் மூன்று மதகுகள் வழியாக அணையில் இருந்து விநாடிக்கு 1329 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
வெளியேற்றப்படும் நீர் ஆழியார் ஆற்றில் கலக்கிறது. இந்த நீர் வேட்டைக்காரன் புதூர் மற்றும் பொள்ளாச்சி கால்வாய் போன்ற பகுதிகளில் பாசன கால்வாய் மூலம் விவசாய நிலங்களுக்கு சென்று சேர்கிறது. தற்போது அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஆழியாறு ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ துணி துவைக்கவோ குளிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கை வெளியிட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications