"வீட்டில பொம்பள பிள்ளைங்க இருக்காங்க.. தயவுசெய்து வராதீங்க".. கிளம்பியது அதிரடி போர்டு!
அதிமுக-பாஜகவுக்கு எதிராக பொள்ளாச்சி சம்பவத்தை திசை திருப்புவதாக கூறப்படுகிறது.
Recommended Video

கோவை: "வீட்டில பொம்பள பிள்ளைங்க இருக்காங்க.. தயவுசெய்து வராதீங்க" என்று கூறும் வாசகத்துடன் கூடிய போர்டு வீட்டில் தொங்குவது போல ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இது உண்மையா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை.
பொள்ளாச்சி சம்பவத்தினை அடுத்து தமிழக மக்கள் ஆத்திரத்தில் இருக்கிறார்கள் என்றால், பொள்ளாச்சி மக்கள் கொலை வெறியில இருக்காங்க.
மிருகம் ஆனாலும் உயிருள்ள ஜீவன் சின்னதம்பிக்கே ஹேஷ்டேக் உருவாக்கிய உணர்வுள்ள தமிழகம் இது! 400 பெண் பிள்ளைகள் என்றால் சும்மாவா? கேட்டாலே பதற செய்யும் பாலியல் விவகாரம் சம்பந்தமாக பொள்ளாச்சி கற்பழிப்பு என்ற ஹேஷ்டேக்கே உருவாகி விட்டது.
|
ஹேஷ்டேக்
இந்த சம்பவம் மக்களை எப்படி எல்லாம் பாதிக்கிறதோ, யார் யாருக்கு என்னவெல்லாம் மனசில் தோன்றுகிறதோ, யார் யார் வாயில் என்னவெல்லாம் வருகிறதோ.. அவை அத்தனையும் பாகுபாடு இல்லாமல் நாராச வார்த்தைகளாக இந்த ஹேஷ்டேக்கில் வந்து விழுகிறது. அதுவும் இது எலக்ஷன் சமயம் வேறு. சம்பந்தப்பட்ட கட்சியை நோண்டி நுங்கெடுத்து வருகிறார்கள் பொதுமக்கள்.

பொள்ளாச்சி கற்பழிப்பு
ஒரு வீட்டு வாசலில் ஒரு போர்டு மாட்டப்பட்டிருக்கிறது. அதில், "வீட்டில் பெண் பிள்ளை உள்ளார்கள். அதிமுக - பா.ஜ.கவினர் ஓட்டு கேட்டு வராதீர்கள்... # நீதி வேண்டும் # பொள்ளாச்சி கற்பழிப்பு" என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் ஏங்கா டா டேய்... அரசியல் ஆக்கி அதுல குளிர் காயுறீங்க... பாவம் டா அந்த புள்ளைங்க" என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

கரைகிறது
இந்த 5 வருஷங்களாக இல்லாவிட்டாலும், எலக்ஷன் நேரம் என்பதால், தினுசு தினுசான அறிவிப்பு, திட்டங்களால் மக்களை என்னவெல்லாமோ செய்து, அவர்களின் மனதில் இடம் பிடித்தார்களோ, அவை அத்தனையும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் கொண்டிருக்கிறது!

காலத்தின் கோலம்
சம்பந்தப்பட்டவர்களை கழுவில் ஏற்றினால் தவிர பழைய மன நிலைமையை மக்கள் மனதில் கொண்டு வர முடியும் என்ற நிர்ப்பந்தமும், நிலைமையும் குறிப்பிட்ட கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும்!
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications