ஒருபக்கம் கோடநாடு: இன்னொருபக்கம் பொள்ளாச்சி: 4 பேரை வளைத்த சிபிஐ: கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை நீதிமன்றத்தில் மேலும் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோடநாடு வழக்கு ஒரு பக்கம் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் சயான், மனோஜ் உள்ளிட்டவர்களிடம் மீண்டும் மறுவிசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு போலவே கடந்த அதிமுக ஆட்சியில் பெரிய அளவில் சர்ச்சையானது பொள்ளாச்சி பாலியல் வழக்கு.
பொள்ளாச்சியில் 2019ம் ஆண்டு பல கல்லூரி மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்து, அவர்களை மிரட்டி கும்பல் ஒன்று பணம் பறித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.

வழக்கு
திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட பலர் மீது இந்த வழக்கில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதோடு இந்த வழக்கில் அதிமுகவினர் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும், குற்றவாளிகளை காப்பாற்ற அதிமுக முயன்று வருவதாகவும் திமுக குற்றச்சாட்டு வைத்தது. அதோடு ஆட்சிக்கு வந்ததும் பொள்ளாச்சி வழக்கில் நீதி நிலைநாட்டப்படும் என்றும் திமுக தெரிவித்து இருந்தது.

சிபிஐ
ஆனால் அதற்கு முன் பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த சிபிஐ போலீசார் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. கோர்டில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் அதன்பின் சிறையில் அடைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து சிபிஐ இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்தது.

விசாரணை
இந்த நிலையில்தான் இந்த வழக்கில் கடந்த வருட இறுதியில் 3 பேர் அதன்பின் சில நாட்களுக்கு முன் ஒருவர் என்று மொத்தம் 4 பேர் கூடுதலாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேரும் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோர் நண்பர்கள். திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் கொடுத்து வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video

ஆதாரங்கள்
கைது செய்யப்பட்ட அருண்குமார், அருளானந்தம், பாபு, சரண்பால் இந்த நான்கு பேருக்கும் எதிரான கூடுதல் வீடியோ ஆதாரங்களும், தொலைபேசி ஆதாரங்களும் திரட்டப்பட்டன. இந்த நிலையில் அருண்குமார், அருளானந்தம், பாபு, சரண்பால் ஆகிய நால்வருக்கும் எதிராக இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் விசாரணை சூடு பிடித்துள்ளது.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications