Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடேய், நீ எங்கடா இங்கே? கோவை வீட்டில் நுழைந்த அரிய விலங்கு! சர்ப்ரைஸ் விசிட்டால் ஆடிப்போன குடும்பம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் நேற்று மாலையில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.. ஒரு வீட்டில் அனைவரும் இருந்தபோது, திடீரென அந்த அரிய விலங்கு வந்து நின்றுள்ளது.. ஒருகணம் ஒன்றுமே புரியாமல் குடும்பத்தினர் பதறிப்போய்விட்டனர்.. அடுத்து என்ன நடந்தது தெரியுமா? இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

முள்ளம்பன்றிகள் பெரும்பாலும் கோவை மாவட்டத்தில் அதிகமாக இருக்கும்.. காரணம், இங்குள்ள வனப்பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த காடுகள், விவசாய நிலங்களில் முள்ளம்பன்றிகள் அதிகமாக இருக்கும்..

Coimbatore Kovai Porcupine

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே வேகமான நகரமயமாக்கல், தொழிற்சாலைகள், வீட்டு மனைகள், சாலைகள் போன்ற வளர்ச்சிகள் காரணமாக விலங்குகளின் இயற்கை வாழ்விடமே சுருங்கிவிட்டது.. இதைத்தவிர காட்டுப்பகுதிகளும் துண்டாடப்பட்டு வருகின்றன.. இதனால் முள்ளம்பன்றிகள் உணவு மற்றும் பாதுகாப்பு தேடி மனிதர்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்கு வர வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுகிறது..

கோயம்புத்தூர் - முள்ளம்பன்றிகள்

இதனால் விவசாய நிலங்களில் முள்ளம்பன்றி பயிர்களை சேதப்படுத்தும் அவலமும் ஏற்படுகிறது.. எனவேதான், சில இடங்களில் முள்ளம்பன்றிகளை வலை வைத்து பிடிக்கப்படுவது, விஷம் வைக்கப்படுவது அல்லது கொல்லப்படுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.. இதன் காரணமாக முள்ளம்பன்றிகளின் எண்ணிக்கையே குறைந்து விட்டது..

சட்டப்படி பாதுகாக்கப்படும் விலங்கு என்றாலும், நடைமுறையில் அந்த பாதுகாப்பு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றே சொல்ல வேண்டும்.. அதுமட்டுமல்ல, சிலசமயம் வாகன விபத்துகளிலும் முள்ளம்பன்றிகள் சிக்கி இறக்கின்றன.. அதிலும் நைட் நேரத்தில்தான் இப்படியான விபத்துகளில் இறக்கின்றன.. காரணம், முள்ளம்பன்றிகள் இரவில் நடமாடும் இயல்பு கொண்டதாம்..

அழிந்து வரும் முள்ளம்பன்றிகள்

கோவை சத்தியமங்கலம், ஆனைமலை, வால்பாறை ரூட்களில், வாகனங்களில் வரும் ஒளியில் சிக்கி இவை அதிகளவு உயிரிழந்ததாக கூறுகிறார்கள்.. சில இடங்களில் முள்ளம்பன்றியின் இறைச்சியும், அதன் முட்களும் மருத்துவ பயன்பாட்டுக்கு உதவுகிறதாம். இதனால் இந்த விலங்குகளை வேட்டையாடுவதாலும் அதன் எண்ணிக்கை குறைந்து விட்டது..

மொத்தத்தில் கோவை பகுதியில் முள்ளம்பன்றி அழிவின் விளிம்பை நோக்கி நகர்கிறது என்றே சொல்லலாம்.. அதனால்தான், வனப்பகுதிகளை பாதுகாக்க வேண்டும், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், வனவிலங்கு நடமாட்டம் உள்ள சாலைகளில் ஸ்பீடு பிரேக் அமைக்க வேண்டும் என்றெல்லாம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

கோவை வீட்டில் சுற்றி வந்த முள்ளம்பன்றி

இப்படிப்பட்ட சூழலில், கோவை மாவட்டத்தில் ஒரு வீட்டுக்குள் திடீரென முள்ளம்பன்றி வந்துவிட்டதாம்.. சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது..

வழக்கம்போல் வீட்டில் குடும்பத்தினர் இருந்தபோது, நேற்று திடீரென வீட்டுக்குள் ஒரு முள்ளம்பன்றி நுழைந்துள்ளது.. திடீரென வந்து நின்ற முள்ளம்பன்றியை பார்த்து, சில நிமிடங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்துள்ளனர்..

லாவகமாக பிடித்தனர்

பிறகு உடனடியாக 'ஃபிரண்ட்ஸ் ஆப் வைல்ட் லைஃப்' அமைப்பினருக்கு தகவல் கொடுத்து தந்தனர்.. சிறிது நேரத்தில் வன உயிரின ஆர்வலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.. வீட்டுக்குள் சுற்றி வந்த முள்ளம்பன்றியை பிடிக்க முடியன்றனர்..

ஆனால், அதனை பிடிப்பது சற்று சவாலானதாக இருந்தது. நீண்ட நேரம் முயற்சித்த பிறகு, எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அதை லாவகமாக பிடித்து சாக்குக்குள் அடைத்து, கோவை மாவட்ட வன அலுவலகத்திற்கு கொண்டு சென்று வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அங்கு வனத்துறையினர் முள்ளம்பன்றியை பரிசோதித்துவிட்டு, தொண்டாமுத்தூர் அருகே போளுவாம்பட்டி பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய வனப்பகுதியில் முள்ளம்பன்றியை பாதுகாப்பாக விடுவித்தனர்.

சர்ப்ரைஸ் சம்பவம்

சிலசமயம் வனவிலங்குகள் திசை தவறி வரக்கூடும் என்பதால், இதுபோன்ற நேரங்களில் பொதுமக்கள் அமைதியாக இருந்து வனத்துறை அல்லது வன உயிரின ஆர்வலர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், வீட்டுக்குள் திடீரென சர்ப்ரைஸாக வந்த முள்ளம்பன்றி சம்பவம், கண்ணம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பேசுபொருளாக தற்போது மாறியிருக்கிறது.. முள்ளம்பன்றிகள் இயற்கையாகவே குகைகள், பாறைகளின் இடுக்குகள் , பள்ளங்களில் வாழக்கூடியவை. அப்படியிருக்கும்போது, திடீரென எப்படி வீட்டிற்குள் வந்தது? என்று பதறிப்போய் கிடக்கிறார்கள்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+