கோவையில் நாளை மின்தடை.. காலை 9 மணி முதல் 5 மணி வரை 'பவர்கட்'.. எங்கெல்லாம் தெரியுமா? முழு விபரம்
கோவை: கோவையில் மின் வாரியம் சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இந்தப் பராமரிப்புப் பணியின் காரணமாக கோவையில் சீரநாயக்கன்பாளையம், வேலாண்டிபாளையம், இடையர்பாளையம், வடவள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு முறையாக மின்சாரம் வழங்கும் வகையில் மாதம்தோறும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வழக்கம். அந்த சமயங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில், கோவை மாவட்டத்தில் சில இடங்களில் மின் வாரியம் சார்பில் பராமரிப்புப் பணிகள் நாளை (செப்டம்பர் 19 ஆம் தேதி) மேற்கொள்ளப்படவுள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கோவையில் செப்டம்பர் 19 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை ஏற்படுகிறது. மாலை 5 மணிக்கு பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்: சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதுார், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம் ஒரு பகுதி, செல்வபுரம், அண்ணா நகர், ஹவுசிங் யூனிட், காந்தி நகர், லட்சுமி நகர் மற்றும் இடையர்பாளையம் வடவள்ளி ரோடு ஒரு பகுதி.
குறிச்சி துணை மின் நிலையம்: எம்.ஜி.ஆர்.நகர், காமராஜ் நகர், அன்னை இந்திரா நகர், ஹவுசிங் யூனிட் பேஸ் 1 ரோடு, ரத்தினம் கார்டன், நாடார் காலனி, முத்தையா நகர், நுாராபாத், சக்தி நகர், சாரதா மில் ரோடு, காந்தி நகர், சி.டி.யூ., காலனி, சீனிவாசன் நகர், மதுக்கரை மார்க்கெட் ரோடு, லோகநாதபுரம், சாய் நகர், கே.ஆர்.கோவில், அம்மன் நகர்.
கோல்டன் நகர், பழனியப்பா நகர், காந்தி நகர், எம்.ஜி.ஆர்.நகர் விரிவாக்கம், சிட்கோ மற்றும் எல்.ஐ.சி., காலனி ஆகிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications