கோவையில் தொடங்கிய பிரதமர் மோடியின் வாகன பேரணி! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
கோவை: லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு இன்று தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, கோவையில் நடைபெறும் ரோட் ஷோவில் பங்கேற்கிறார். மோடியின் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை: பாஜக சார்பில் நடைபெறும் ரோட் ஷோவில் பங்கேற்கப் பிரதமர் மோடி கோவை வந்தடைந்துள்ளார். கர்நாடகாவில் இருந்து தனி விமானம் மூலம் வந்த பிரதமர் மோடி, கோவையில் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாதமே இருப்பதால் அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. குறிப்பாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக இம்முறை தமிழகத்தில் கணிசமான தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றி விட்டதால், பாஜக தலைமையில் தனியாக ஒரு கூட்டணி அமைகிறது.
தேர்தல் அறிவிப்புக்கு பின்னர்: இந்தக் கூட்டணியின் இறுதி வடிவம் இன்னும் முழுமை பெறவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே, பிரதமர் மோடி தமிழகத்திற்கு மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்தே அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகை தந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், தேர்தல் அறிவிப்புக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை தர உள்ளார்.
குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு: கோவை வரும் பிரதமர் மோடி, பிரமாண்ட வாகன அணிவகுப்பில் பங்கேற்கிறார். கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி காவல் நிலையம் அருகே புறப்படும் வாகன அணிவகுப்பு, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று முடிவடைகிறது. அங்கு கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.
தேர்தல் அறிவிப்புக்கு பிறகு பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த ரோடு ஷோ என்பதால் பாஜக பிரமாண்ட ஏற்பாடுகளை செய்ய உள்ளது. சாலையின் இருபக்கமும் தொண்டர்கள் குவிய உள்ளனர். தற்போதே வழிநெடுக பாஜக கொடிக்கம்பங்கள், பதாகைகளை வைத்து மோடியை வரவேற்க பாஜவினர் ஆயத்தமாகி வருகிறார்கள்.
5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு: ரோடு ஷோவில் பங்கேற்க பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 5.30 மணிக்கு கோவை வருகிறார். பின்னர் அங்கிருந்து வாகன அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்கும் சாய்பாபா காலனிக்கு காரில் செல்கிறார். தொடர்ந்து வாகன அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமர் மோடி வருகை காரணமாக கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
பாஜகவினர் உற்சாகம்: 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் இருபுறமும் குவிய உள்ளனர். ரோடு ஷோ நடைபெறும் சாலையில் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்தப்பகுதி முழுவதும் போலீசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் ரோடு ஷோ கோவையில் இன்று நடைபெற இருப்பதால் பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். மோடி வருகையை ஒட்டி கோவையில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது. டிரோன் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications