வகுப்பறைக்கு வரக்கூடாது.. பூப்பெய்த மாணவியை வாசலில் தேர்வு எழுதவைத்த தனியார் பள்ளி.. கோவையில் அவலம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள தனியார் பள்ளியில் பூப்பெய்த மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

பூப்பெய்தல், மாதவிடாய் என்பது ஒரு இயற்கை நிகழ்வு. பருவ வயதை அடையும்போது பெண்ணுக்கு ஏற்படும் மாற்றம் இது அவ்வளவுதான். ஆனால், மாதவிடாய் என்பதை இன்றளவும் ஒரு தீட்டாகப் பார்க்கப்படுகிறது. மாதவிடாய் என்பது ஒரு பெரிய விஷயமாகவும், வெட்கக்கேடாகவும் கூட பலரால் பார்க்கப்படுகிறது. தொழில்நுட்பம், அறிவியல் என்று வளர்ந்த சமுதாயமாக மாறினாலும் கூட இந்த விஷயத்தில் பலரும் பிற்போக்கு சிந்தனையுடனேயே இருக்கின்றனர்.

Coimbatore private school

குறிப்பாக, எதையும் அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளிகளிலேயே, பூப்பெய்தலை தீட்டாகப் பார்க்கப்படும் சம்பவம்தான் அதிர்ச்சிகரம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள தனியார் பள்ளியில் பூப்பெய்த மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஏப்ரல் 5 ஆம் தேதி பூப்பெய்தி உள்ளார். இந்நிலையில், தற்போது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வழக்கம்போல சென்றுள்ளார்.

ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் மாதவிடாயை காரணம் காட்டி சிறுமியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வகுப்பறையின் வாசலிலேயே அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர். சிறுமியின் தாய் தனது செல்போனில் பதிவு செய்த இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி பெரும் பேசு பொருளாகியுள்ளது.

பூப்பெய்துவது என்பது இயற்கை நிகழ்வு. இதனைக் கூட புரிந்து கொள்ளாமல் பள்ளி நிர்வாகத்தினரே வகுப்பறைக்குள் சிறுமியை அனுமதிக்காமல் வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ள சம்பவம் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+