அப்பார்ட்மென்ட்டில் "பெண்கள்".. சபலத்தில் ஓடிய நபர்கள்.. அங்கே போய் பார்த்தால்.. பீதியில் பீளமேடு
அப்பார்ட்மென்ட்டில் விபச்சாரம் நடப்பதாக சொல்லி பணமோசடி செய்த கும்பல் கைதானார்கள்
கோவை: அப்பார்ட்மென்ட் ஒன்றில் பெண்கள் பாலியல் தொழில் செய்வதாக வந்த தகவலையடுத்து, கோவை பீளமேடு போலீசார் களமிறங்கிய நிலையில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த முதியவர் ராஜேந்திரன்.. இவர் இங்குள்ள ஒரு அப்பார்ட்மென்ட்டில் வசித்து வருகிறார்.. இந்நிலையில், இவர் பீளமேடு போலீசில் ஒரு புகார் தந்தார்.
அந்த புகார் மனுவில், "எங்கள் அப்பார்ட்மென்ட்டில் பாலியல் தொழில் செய்வதாகவும், அதற்காக பெண்கள் பலர் இந்த அப்பார்ட்மென்ட்டிலேயே தங்கியிருப்பதாகவும் சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரவி வருகிறது..

அப்பார்ட்மென்ட்
கடந்த சில மாதங்களாகவே இப்படி ஒரு தகவல் வட்டமடித்து வருவதுடன், எங்களுக்கு அவப்பெயரை உருவாக்கி வருகின்றனர். அவர்கள் தங்கள் வலையில் விழும் பெண்களை, தவறான வழிநடத்துதல் மூலம் எங்கள் அப்பார்ட்மென்டுக்கு வரவழைத்து, பணம் பறித்து ஏமாற்றி வருகின்றனர்... இதனால் எங்கள் அப்பார்ட்மென்ட்டில் உள்ளவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

அக்கவுண்ட்
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், அந்த கும்பலை ட்ராக் செய்து கைது செய்துவிட்டனர்.. இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொல்லும்போது, "புகாரின் பேரில் டிராக் செய்தோம்.. அந்தவகையில் பாதிக்கப்பட்ட நபர்களின் வங்கி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தோம்.. வங்கி அக்கவுண்ட்டில் இருந்த செல்போன் நம்பர்களை வைத்து, சம்பந்தப்பட்டவர்களை கண்காணித்தோம்.. அப்போதுதான், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இந்த கும்பல் செயல்பட்டது தெரியவந்தது

அப்பார்ட்மென்ட்கள்
இதற்கெல்லாம் காரணம், முகமது ரிஸ்வான் என்பவர்தான். இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்.. இவர்தான் பணம் பறிப்பு கும்பலின் மூளையாக இருந்து வந்துள்ளார்.. பெங்களூரில் இதற்காகவே ஓர் அப்பார்ட்மென்ட் வாடகைக்கு எடுத்துவைத்துள்ளார்.. மோசடி செய்வதற்காகவே, 11 பேரை வேலையில் வைத்திருக்கிறார்.. ஆன்லைனில் தங்களிடம் சிக்கும் நபர்களை, கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் பல அப்பார்ட்மென்ட்களில் பெண்கள் இருப்பதாக சொல்லி, பணம் பறிப்பதுதான், இந்த 11 பேரின் வேலையாம்..

லோகேண்டா
இதையடுத்து முகமது ரிஸ்வான் மற்றும் 6 பெண்கள் உள்பட மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. அவர்களிடம் இருந்து 10 சிம் கார்டுகள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன... லோகேண்டா என்ற வெப்சைட்டை உருவாக்கி, செல்போன் நம்பர்களை பதிவு செய்து, ஜி-பே உள்ளிட்ட ஆன்லைன் மூலம் இந்த பணத்தை வாங்கியுள்ளனர்.. ஆனால், பணம் கொடுத்தவர்களிடம் போலி அட்ரஸை தந்து ஏமாற்றியுள்ளனர்..

கஞ்சா சாக்லேட்
இதைதவிர, பெண்களை பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தி வந்துள்ளனர்... கோவையில் அதிகரித்து வரும் கஞ்சா விற்பனையில் இவர்களுக்கும் சம்மந்தம் இருக்குமா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.. காரணம், ஆந்திராவில் இருந்துதான் கோவைக்கு அதிகளவில் கஞ்சா கொண்டு வரப்படுகிறது.. அதேபோல ராஜஸ்தானில் இருந்து, கஞ்சா சாக்லேட் வருகிறது. இதுகுறித்து விசாரிக்க தனிப்படை போலீஸ் ராஜஸ்தான் சென்றுள்ளனர்" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications