பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை
கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் நாட்டையே உலுக்கியது. அது தொடர்பான ஆடியோவில் "அண்ணா என்னை விட்டுடுங்க, அடிக்காதீங்கண்ணா" என்ற ஒரு பெண்ணின் அலறலால் பலர் அச்சமடைந்தனர்.
காதல் என்ற வலையில் விழ வைத்து அவர்களை தனியே அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து அவர்களை மீண்டும் மீண்டும் மிரட்டி வரவழைத்து கொடூரத்தை ஒரு கும்பல் அரங்கேற்றியது.
இந்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என மனித சங்கிலி போராட்டங்கம், மாதர் சங்க போராட்டம், கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம் என நடந்தன. இதையடுத்து 2020 ஆம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதில் தொடர்புடையதாக 9 பேரை சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு என்பவரின் செல்போன்தான் முக்கிய ஆதாரமாக இருந்தது. அவரது போனில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தன.
இந்த வீடியோவில் இருந்த 20 பெண்களை சிபிஐ அடையாளம் கண்டு அவர்களுக்கு மனதை தைரியப்படுத்தும் படியாக கவுன்சலிங் கொடுத்தது. பிறகு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சபரிராஜன் என்பவனின் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. அவனது லேப்டாப்பிலும் வீடியோக்கள் கொட்டி கிடந்தன.
பெண்களுக்கு எதிராக கொடுமைகளை நிகழ்ச்சி ஆனைமலை அருகே உள்ள சின்னப்பாளையம் என்ற இடத்தில் உள்ள திருநாவுக்கரசரின் பண்ணை வீட்டில்தான் இந்த சம்பவம் நடந்தது. பொள்ளாச்சி அட்டாக் பாய்ஸ் என்ற வாட்ஸ் ஆப் குரூப் மூலம் திருநாவுக்கரசும் சபரிராஜனும் ஏதாவது ஒரு பெண்ணை டார்க்கெட் செய்து அவர்களுக்கு ஆசைவார்த்தை கூறி காதல் வலையில் விழ வைப்பார்களாம்.
அவர்களை அந்த அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்ததும் அம்பலமானது. இந்த வழக்கில் சபரிராஜன் (32), திருநாவுக்கரசு (34), சதீஷ் (32), வசந்தகுமார் (30), மணிவண்ணன் (32), பாபு (33), ஹெரன்பால் (32), அருளானந்தம் (38), அருண்குமார் (32) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடந்த 2019ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி மகளிர் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கப்பட்டு இன்கேமரா முறையில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை அரசு தரப்பு, எதிர் தரப்பு இறுதி வாதம் முடிந்து தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது.
அதன்படி மகளிர் நீதிபதி நந்தினிதேவி இன்று தீர்ப்பு அளித்தார். இந்த 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். தண்டனை விவரங்கள் இன்று பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது அந்த 9 பேருக்குமான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் சேர்த்து ரூ 85 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஒவ்வொரு பெண்ணுக்கும் 10 லட்சம், 15 லட்சம் என இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications