கோவை, கோட்டைமேட்டில் ரம்ஜான் கொண்டாட்டம்.. சமூக நல்லிணக்க பிரியாணி விருந்தில் ஏராளமானோர் பங்கேற்பு
கோவை: நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கோவை கோட்டைமேடு வின்சென்ட் ரோடு கிரீன் கார்டன் குடியிருப்பு பொது நலச் சங்கம் சார்பில் 6 ஆவது ஆண்டாக சமூக நல்லிணக்க ரம்ஜான் பிரியாணி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
முஸ்லிம் மக்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ரமலான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை தண்ணீர் கூட அருந்தாமல் நோன்பு கடைப்பிடிக்கப்படும். பின்னர், மாலை தொழுகைக்குப் பின்னரே உணவு அருந்துவார்கள். திருக்கூர் ஆர் அருளப்பட்ட புனித மாதமாகும்.

30 நாட்கள் இந்த நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. 30 ஆவது நாளில் வானில் பிறை தென்பட்டதும், அதற்கு அடுத்த நாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நேற்று பிறை தெரிந்ததையடுத்து, இன்று ரமலான் பண்டிகை இந்தியா முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. கோவையில் உள்ள பல்வேறு மசூதிகளில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
கோவை கோட்டைமேடு வின்சென்ட் ரோடு கிரீன் கார்டன் குடியிருப்பு பொது நலச் சங்கம் சார்பில் 6 ஆவது ஆண்டாக சமூக நல்லிணக்க ரம்ஜான் பிரியாணி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த 5,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குறிப்பாக, இப்பகுதியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் ஏழை - எளியோருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், ரம்ஜான் பண்டிகையின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் இந்த விழாவில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
மேலும், சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பிரியாணி வழங்கினர். இந்த சமூக நல்லிணக்க ரம்ஜான் பிரியாணி விருந்து, கோவையில் மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோட்டைமேடு பகுதியில் உள்ள ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத் நிர்வாகிகள் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று இனிப்புகள் வழங்கினர். கோவில் நிர்வாகிகளும் இந்து கடவுளின் படங்களை கொடுத்து ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications