குடும்ப அட்டைதாரர்கள் ஹேப்பி.. ரேஷனில் மாற்றம்! கோவை ரேஷன் கடைகளுக்கு போன "பொருள் பாதுகாப்பு" ஆர்டர்
கோவை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்களுக்காகவும் பல்வேறு அறிவிப்புகளை தமிழக அரசு செய்து தருகிறது. அதில் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலுள்ள ரேஷன் கடைகளில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.. எனினும் சில வசதிகள் கோரி, ரேஷன் கடை ஊழியர்கள் வேண்டுதல்களை அரசுக்கு விடுத்த வண்ணம் உள்ளனர்.. அதேபோல, ரேஷன் கடை ஊழியர்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. தற்போதுகூட முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழக ரேஷன் கடைகளில், அட்டைதாரர்களின் வசதியே பிரதானமாக பார்க்கப்பட்டு வருகிறது.. சமீபத்தில்கூட, முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுதேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் முதல்-அமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார்..

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசுக்கு ரூ.35 கோடியே 92 லட்சம் ஆண்டுக்கு கூடுதலாக செலவாகும்..
புதிய திட்டம் துவக்கிய தமிழக அரசு
எனினும், இந்த திட்டத்தின் மூலம் 34,809 ரேஷன் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக்கொண்ட15 லட்சத்து 81364 ரேஷன் கார்டுகளிலுள்ள 20 லட்சத்து 42657 பயனாளர்களும், 91,969 ரேஷன் கார்டுகளில் உள்ள 1 லட்சத்து 27797 மாற்றுத்திறனாளிகளும் என மொத்தம் 16 லட்சத்து 73333 ரேஷன் கார்டுகளில் உள்ள 21 லட்சத்து 70454 பயனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்த திட்டத்தின் மூலம், மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் ரேஷன் பொருட்களைப் பாதுகாப்பாக தகுதியுள்ள பயனாளர்களின் வீட்டிற்கே சென்று ரேஷன் விற்பனையாளர்கள் விநியோகிக்க போகிறார்கள்.. அரசின் இந்த அதிரடி நடவடிக்கையானது, மூத்த குடிமகன்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பெருத்த மகிழ்ச்சியை தந்து வருகிறது,.
கோவை மாவட்ட அறிவுறுத்தல்கள்
இந்நிலையில், அரிசி, பருப்பு, பாமாயில் போன்றவற்றை நல்ல முறையில் இருப்பு வைக்க வேண்டும் என்ற உத்தரவு கோவை மாவட்ட ரேஷன் கடைகளுக்கு பறந்துள்ளது.. தமிழகத்திலேயே கோயம்புத்தூர் மாவட்டத்தில்தான் நிறைய ரேஷன் கடைகள் அதாவது 1405 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன..
இதில், மாவட்ட அளவில், கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் மட்டும் 1375 ரேஷன் கடைகள் உள்ளன.. தற்போது, அரிசி, பருப்பு, பாமாயில் போன்றவற்றை நல்ல முறையில் இருப்பு வைக்க வேண்டும் என்று அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உயர் அதிகாரிகள் இதுகுறித்து விற்பனையாளர்களுக்கு சில அறிவுறுத்தல்களையும் வழங்கியிருக்கிறார்கள்.. அதில், "மழை பெய்து வருவதால் ரேஷன் பொருட்கள் பாதிக்க கூடாது, பாதுகாப்புடன் இருக்க வேண்டும். வால்பாறை, ஆனைமலை போன்ற பகுதியில் ரேஷன் கடைகளுக்கு காட்டு யானைகள் வந்து செல்வதாக தெரிகிறது. எனவே, மேற்கண்ட பகுதியை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். ரேஷன் பொருட்கள் தரமாக இருப்பதை கடை விற்பனையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்" என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஏற்கனவே எலக்ட்ரானிக்ஸ் எடை தராசு மற்றும் பில் போடும் பிஓஎஸ் கருவி இரண்டையும், புளூடூத்துடன் இணைக்கும் பணி, கோவை மாவட்ட கூட்டுறவு சங்க கடைகளில், முழுமையாக முடிவடைந்துள்ளன.
இதனால், ரேஷன் கடைகளில் வாங்கும் உணவு பொருட்கள், சரியான எடையில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், ரேஷன் பொருட்கள் இருப்பையும் வைக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பது, ரேஷன்தாரர்களுக்கு நம்பிக்கையை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications