கோவையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, விகே சிங் - பலத்த பாதுகாப்பு
கோவை: கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, வி.கே.சிங் ஆகியோர் வருகை தந்துள்ளனர். இதையடுத்து கோவையில் பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவை கொடிசியா வளாகம் அருகே உள்ள மைதானத்தில் பிரதமர் மோடி வரும் 25-ந் தேதி பங்கேற்கும் பொது கூட்ட மேடை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்களும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்களுமான கிஷன் ரெட்டி, விகே சிங் ஆகியோர் பங்கேற்றனர். பாஜக மாநில தலைவர் எல். முருகன் உள்ளிட்ட நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.

இன்று பிற்பகல் 12 மணியளவில் ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் மோகன் பகவத் கோவை விமான நிலையம் வருகை தந்தார். ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மோகன் பகவத்தை வரவேற்றனர்.


கோவை அய்யப்பன் பூஜை சங்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் மேகாலயா முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் எழுதிய இந்த மண்ணில் விளைந்த மகத்தான சிந்தனை என்ற நூல் வெளியீட்டு விழாவில் மோகன் பகவத் பங்கேற்கிறார். மேகாலயா ஆளுநராக பதவி வகித்த தமிழக ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான சண்முகநாதன், பாலியல் சர்ச்சையால் பதவியை ராஜினாமா செய்தவர்.

இதனைத் தொடர்ந்து வரும் 19-ந் தேதி வரை கோவையில் முகாமிடும் மோகன் பகவத், சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஏற்கனவே பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்களுடனும் தமிழக நிலவரம் குறித்தும் மோகன் பகவத் கலந்துரையாட உள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் மத்திய அமைச்சர்கள் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 500க்கும் அதிகமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications