ஒன்னு போதும்.. போதையில் மிதக்கும் கோவை! ஹரியானாவில் சிக்கிய சச்சின்! கையில் இருந்ததை கவனிச்சீங்களா?
கோவை : கோவை மாநகரில் போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலுக்கு ஹரியானா மாநிலத்தில் இருந்து போதை மாத்திரை சப்ளை செய்த சச்சின் கார்க் என்பவரை தனிப்படை போலீசார் ஹரியானா சென்று கைது செய்தனர். அந்த நபரிடம் இருந்து 20 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா, போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் குற்ற சம்பவங்களை ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதனையடுத்து கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி போதைப் பொருள் கடத்தல்காரர்களை கைது செய்து வருகின்றனர். சென்னை,ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் கோவை மாநகரில் போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலுக்கு ஹரியானா மாநிலத்தில் இருந்து போதை மாத்திரை சப்ளை செய்த சச்சின் கார்க் என்பவரை தனிப்படை போலீசார் ஹரியானா சென்று கைது செய்தனர். கோவை மாநகரில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் கோவை மாநகரில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட யாசிக் இலாஹி, மரியா, முஜிப் ரகுமான், கிருஷ்ணன், சிநேகா,
ஆஷிக் ஷெரிப் மற்றும் ரிஸ்வான் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் அவர்களிடம் இருந்து
1.4 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட ஏழு பேரிடமும் விசாரணை மேற்கண்ட பொழுது ஹரியானா மாநிலத்தில் இருந்து போதை மாத்திரைகள் கோவை கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.மேலும் ஹரியானாவைச் சேர்ந்த சச்சின் கார்க் என்பவர் போதை மாத்திரைகளை கொரியர் மூலம் போலி ஜிஎஸ்டி பில்களை வைத்து கோவைக்கு அனுப்பி இருப்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து கோவை மாநகர தனிப்படை போலீசார் ஹரியானா மாநிலம் சென்று அங்கிருந்த போதை மாத்திரை விற்பனை செய்யும் சச்சின் கார்க் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 19,500போதை மாத்திரைகள் மற்றும் போலி பில், செல்போன் லேப்டாப் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், வலி நிவாரணி மாத்திரைகளை போதைப் பொருளாக பயன்படுத்துவதற்கு விற்பனை செய்த சச்சின் கார்க் என்பவரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர் என்றார்.
சச்சின் துலிப் பார்மா என்ற பெயரில் நிறுவனத்தை இயக்கி வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.தற்போது அவரிடமிருந்து 20,000 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு மாத்திரை 300 ரூபாய் என விற்பனை செய்து வந்துள்ளனர், ஹரியானாவில் இருந்து இந்த கும்பல் பார்சலாக மாத்திரைகளை அனுப்பி வந்துள்ளது இவர் மீது ஏற்கனவே மூன்று வழக்குகள் உள்ளது.
தமிழ்நாட்டில் பல நகரங்களுக்கும் இவர்கள் மாத்திரைகளை அனுப்பிவந்துள்ளார். போலி ஜிஎஸ்டி தயார் செய்தும் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதால் இது தொடர்பாக ஜிஎஸ்டி துறைக்கும் அறிக்கை கொடுக்க உள்ளோம். போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலர் இந்த வழக்குகளில் கைது செய்யப்பட உள்ளார் என பாலகிருஷ்ணன் கூறினார்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications