மதுப்பிரியர்கள் ஒரே குஷி.. டாஸ்மாக்கில் மே மாதம் நடந்த மேஜர் சம்பவம்
கோவை: தமிழகத்தில் இந்த மாதம் கடுமையான வெயில் மற்றும் மழையும் இருந்த நிலையில் டாஸ்மாக் வருவாய் கிடுகிடுவென உயர்ந்துள்ளதாம். குறிப்பாக பீர் விற்பனை 30 சதவீதம் அளவுக்கு அதிகரித்து களைகட்டியுள்ளதாம்.
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. மே மாதம் தொடங்கிய கத்திரி வெயில் சுட்டெரித்தது. பல ஊர்களில் 110 டிகிரி வரை வெப்பநிலை பதிவானது. பொதுவாக வெயில் காலத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் பீர் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதுவும் கூலிங் பீர் வாங்கி குடிக்கவே விரும்புகிறார்கள். வழக்கமாக டாஸ்மாக் கடைகளில், சாதாரண நாட்களில் 80 ஆயிரம் முதல் 95 ஆயிரம் பெட்டி 'பீர்' விற்பனை ஆகும். ஆனால் கோடை வெயில்ல காரணமாக 1 லட்சத்து 36 ஆயிரம் பெட்டி 'பீர்' விற்பனை செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகமும் குடிமகன்களுக்கு கூலிங் பீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில சரக்குகள் மற்றும் பெட்டிகளை எல்லா கடைகளுக்கும் அதிகரித்தது. அதுமட்டுமின்றி டாஸ்மாக் நிர்வாகமும் பல்வேறு புது வகையான பீர்களையும் அறிமுகம் செய்து குடிமகன்களை குஷிப்படுத்தியது.
இந்த நிலையில், கோடை காலத்தையொட்டி தமிழகத்தில் பீர் விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த மே 1-ந்தேதி முதல் தற்போது வரை, டாஸ்மாக் கடைகளில் 25 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான பீர் பெட்டிகள் விற்பனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு மே மாத விற்பனையை காட்டிலும் 30 சதவீதம் அதிகம் என்கிறார்கள் டாஸ்மாக் வட்டார அதிகாரிகள்.
தமிழகத்தில் கோடைகாலத்தையொட்டி இந்த முறை 24 வகையான பீர் விற்பனை நடந்தள்ளது. இதில், 3 புது வகையான பீர் பிராண்டுகளும் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக 100 சதவீதம் கோதுமை பீா் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்த புதிய பீர் வகைளுக்கு தமிழகத்தில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்,
இதையடுத்து மேலும், புதிய வகை பீர் பிராண்டுகளை அறிமுகம் செய்யவும் டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறதாம். விற்பனையை பொறுத்தவரையில், மே மாதத்தில் மட்டும் இதுவரை 25 லட்சத்து 50 ஆயிரம் வரையில் பீர் பெட்டிகள் விற்பனை நடந்துள்ளதாம்.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 20 லட்சம் வரை பீர் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதைவிட 30 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளதாம். தமிழ்நாட்டில் இந்த முறை வெளிநாட்டு வகை மதுபான விற்பனையும் அதிகரித்துள்ளதாம். அதேபோல், டாஸ்மாக் வருவாயும் பீர் விற்பனை உயர்வால் கணிசமாக உயர்ந்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications