பாட்டி, சிறுமியின் சடலங்களுடன் நாள் முழுவதும் இருந்த சந்தோஷ்குமார்.. பரபரப்பு வாக்குமூலத்தில் பகீர்

கோவை துடியலூர் அருகே ஏழு வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரே நேரத்தில் தனது பாட்டி மற்றும் குழந்தையின் சடலத்துடன் அவன் வீட்டிலிருந்த அதிர்ச்சி தகவல் வெளியா

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Kovai Girl News: பாட்டி மற்றும் சிறுமியின் சடலங்களுடன் வீட்டிலிருந்த கொலையாளி- வீடியோ

    கோவை: கோவை துடியலூர் அருகே ஏழு வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி ஒரே நேரத்தில் தனது பாட்டி மற்றும் குழந்தையின் சடலங்களுடன் வீட்டிலிருந்ததாக அதிர்ச்சி தகவலை வெளியாகியிட்டுள்ளார்.

    கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியில் 7 வயது சிறுமி கடந்த 25-ஆம் தேதி மாலை விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனதை அடுத்து காவல் துறையினர் விடிய விடிய சிறுமியை தேடியுள்ளனர்.

    பின்னர் 26ஆம் தேதி காலை அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே டீசர்ட் ஒன்றில் சுற்றப்பட்டு சிறுமியின் சடலம் போலீஸாரால் மீட்கப்பட்டு பிரேத பரிசாதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    விசாரணை

    விசாரணை

    பரிசோதனை அறிக்கையில் சிறுமி பலமுறை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்ததும் தெரியவந்ததையடுத்து கொலையாளியை பிடிக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி மணி தலைமையில் 13 குழுக்கள் அமைத்து விசாரணையானது மேற்கொள்ளப்பட்டது.

    போலீஸ் விசாரணை

    போலீஸ் விசாரணை

    அந்த கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி 6 பேரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். அதில் சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் மீது சந்தேகம் வலுக்கவே அவனை தனியாக போலீஸார் விசாரித்தனர்.

    பாட்டியை பார்க்க

    பாட்டியை பார்க்க

    இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் பன்னிமடை பகுதியில் வசித்து வந்த தனது தாத்தா பாட்டியை காண்பதற்கு அவ்வப்போது வந்து சென்றுள்ளார் .

    பாட்டி வீட்டில்

    பாட்டி வீட்டில்

    கடந்த நவம்பர் மாதம் இவரது தாத்தா உயிரிழக்கவே வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது பாட்டிக்கு துணையாக கடந்த ஜனவரி மாதம் முதல் பாட்டி வீட்டிலேயே தங்கி இருந்துள்ளார்.

    பாலியல் பலாத்காரம்

    பாலியல் பலாத்காரம்

    அப்போது அப்பகுதியில் விளையாடி வந்த சிறுமியை செல்போனில் விளையாட்டை காட்டியும் சாக்லேட் வாங்கி கொடுத்தும் தனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்ற சந்தோஷ்குமார், நான்கு முறை தனது பாட்டி உறங்கிய நேரத்தில் பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்தியுள்ளார்.

    கழுத்தை இறுக பிடித்து

    கழுத்தை இறுக பிடித்து

    அப்போது வலியால் சிறுமி கதற வெளியே சத்தம் கேட்காமல் இருப்பதற்காக சிறுமியின் வாய் மற்றும் மூக்கை துணி ஒன்றை கொண்டு பொத்திய அந்த கொடூரன் லாவகமாக சிறுமியின் கழுத்தை இறுகப் பிடித்து சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.

    பாட்டி

    பாட்டி

    இதனால் மூச்சு திணறிய சிறுமி மயக்கமடையவே தனது உடையை மாற்றிக் கொண்ட சந்தோஷ் குமார் சிறிது நேரம் வீட்டின் வெளியே நின்று உள்ளார். பின்னர் திரும்ப உள்ளே சென்றபோது மரணப்படுக்கையில் இருந்த அவனது பாட்டி மரணமடைந்திருந்தது தெரியவந்துள்ளது.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    தொடர்ந்து உள்ளே சென்று சிறுமியை எழுப்பியபோது சிறுமியும் உயிரிழந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த சந்தோஷ் குமார் சிறுமியை காணாமல் ஊர் மக்களும் காவல்துறையும் தேடி வருவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

    அங்கேயே

    அங்கேயே

    தொடர்ந்து சிறுமியின் உடலை தனது டீ ஷர்ட்டால் சுற்றி வீட்டின் உள்ளேயே மறைத்து வைத்து விட்டு தனது பாட்டி உயிரிழந்தது குறித்து உறவினர்களுக்கு தகவல் அளித்த அவர் ஒரே வீட்டில் இரண்டு சடலங்களை வைத்து ஒன்றும் தெரியாதவர் போல் அங்கேயே இருந்துள்ளார்.

    அப்புறப்படுத்தி

    அப்புறப்படுத்தி

    பின்னர் இரவு முழுவதும் பாட்டியின் உறவினர்கள் 10 பேர் வீட்டின் வெளியே இருந்ததால் சிறுமியின் உடலை வெளியேற்ற முடியாமல் தவித்த அவர் அனைவரும் அதிகாலை 3 மணி அளவில் உறங்கியதையடுத்து வேகவேகமாக சிறுமியின் உடலை கொண்டு சென்று அதே பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அருகே அப்புறப்படுத்தி தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

    விசாரணை

    விசாரணை

    பின்னர் மறுநாள் காலை ஒருபுறம் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டு காவல்துறையினர் அங்கு விசாரணை மேற்கொண்ட போது தனது பாட்டியின் இறுதிச் சடங்கில் மும்முரமாக இருந்துள்ளார் சந்தோஷ்குமார். அதன் பின்னர்தான் காவல்துறையினர் அப்பகுதியில் சிறுமியுடன் சில தினங்களாக நெருங்கிப் பேசிய நபர்கள் மற்றும் அப்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக சுற்றித் திரிந்த வாலிபர்கள் என 6 பேரை பிடித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு கடைசியில் சந்தோஷ் குமாரை கைது செய்துள்ளனர்.

    டி சர்ட்

    டி சர்ட்

    முதலில் தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறிய சந்தோஷ்குமார் காவல்துறையினரின் தனிப்பட்ட கவனிப்பிற்கு பிறகு சிறுமியின் உடல் சுற்றப்பட்டிருந்த டி-ஷர்ட் தன்னுடையது என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+