கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் சதியாகவும் இருக்க வாய்ப்பு உள்ளதால் தீவிர விசாரணை தேவை-எச்.ராஜா

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் சதியாகவும் இருக்க வாய்ப்பு உள்ளதால் தீவிர விசாரணை தேவை என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.

கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பாக அதிகாலையில் கார் ஒன்று பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது. இது அப்பகுதியினரை கடும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்த கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தனிப்படை விசாரணை

தனிப்படை விசாரணை

கோவில் முன்பாக கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் குறித்து இந்து அமைப்பினர் பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பி வருகின்றனர். இதனால் போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வும் செய்தனர். கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன. கோவில் முன்பாக குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய்கள் உதவியுடன் விசாரணை நடைபெறுகிறது.

 மர்ம நபர் யார்?

மர்ம நபர் யார்?

தற்போதைய நிலையில் காரில் சிலிண்டர்கள் ஏற்றபட்டிருந்தன; இந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறியிருக்கின்றன. அதனால் காரில் இருந்த நபர் தீக்கிரையாகி இருக்கிறார் என்பது போலீஸ் கருத்து. மேலும் காரில் இருந்த நபர் யார்? காரின் தற்பொதைய உரிமையாளர் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 சதி எனும் சந்தேகம்

சதி எனும் சந்தேகம்

இன்னொரு தரப்பினர், காரில் பால்ரஸ் குண்டுகள்,ஆணிகள் சிதறிக் கிடந்தன; அதனல் சதியாக இருக்கலாம். நாசவேலைக்காகவே கார் அதிகாலையில் கோவில் முன்பாக வந்து நிறுத்தபட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து ஆதாரமான தகவல்கள் எதுவும் இல்லை.

எச்.ராஜா ட்வீட்டர்

எச்.ராஜா ட்வீட்டர்

இந்த தகவல்களை முன்வைத்து இது சதியாக இருக்கலாம் என வலதுசாரித் தலைவர்களும் கூறி வருகின்றனர். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவல்களை பகிர்ந்து இச்சம்பவம் நடந்துள்ள நேரம் இடம் ஆகியவற்றைப் பார்க்கும் போது இது சதியாகவும் இருக்க வாய்ப்பு உள்ளதால் தீவிர விசாரணை தேவை என குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+