Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

100 பேரை வேணாலும் இறங்குங்க.. பார்த்துக்கலாம்.. கோவையில் சம்பவத்திற்கு தயாரான செந்தில் பாலாஜி

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. செந்தில் பாலாஜியின் வருகை கோவை அரசியலில் சூட்டை அதிகரித்துள்ளது. செந்தில் பாலாஜி பெயரில் சுயேச்சைகள் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு அவர் தன்னுடைய ஸ்டைலில் அதிரடியாக பதில் அளித்துள்ளார். (Senthil Balaji)

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கோவை மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியே எங்கள் இலக்கு. 10 தொகுதிகளும் வளர்ச்சி பெற வேண்டும். அதில், கோவை தெற்குத் தொகுதியும் வளர்ச்சி பெற வேண்டும் என்று பணிகளை முன்னெடுத்துள்ளோம்.

senthil-balaji-i-am-ready-face-100-candidates-in-coimbatore-south-said-senthil-balaji

அவரும் வெளியூர் தானே

கோவையில் செம்மொழிப் பூங்கா, பெரியார் நூலகம், மேற்குப்புறவழிச்சாலை, ஹாக்கி மைதானம் உள்ளிட்ட திட்டங்களை செய்துள்ளோம். அதிமுகவினர் என்ன திட்டங்களைச் செய்தார்கள். தேர்தல் களத்திற்கு எங்களுக்கு கரூரில் இருந்தோ, வேலூரில் இருந்தோ ஆட்களை இறக்கி வேலை செய்ய தேவையில்லை. கோவையில் உள்ள எங்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போர்ப்படை சிப்பாய்களைப் போல செயல்படுவார்கள்.

அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனனும் வெளியூரில் இருந்து வந்தவர் தானே. அவர் 25 ஆண்டுகளுக்கு முன் வந்தார். நான் 5 ஆண்டுகளுக்கு முன்பு வந்தேன். அவ்வளவுதான். அவரை விட கோவையையும், தெற்கு தொகுதியையும் நன்கு அறிந்தவன் நான். பல பணிகளில் பங்கெடுத்துள்ளேன். அதனால் அவர் சொல்லும் இந்த கருத்து மக்களிடம் எடுபடாது. நான் நடந்து சென்று வாக்கு சேகரிக்கும்போது ஒவ்வொரு வீட்டிலும் எனக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள்.

என் பெயரில் 100 பேர் இறங்கினாலும்

என்னுடைய பெயரில் இங்கு 10 பேர் போட்டியிட்டாலும் சரி, 100 பேர் வந்தாலும் சரி. களத்தில் பார்த்துக்கொள்ளலாம். மக்கள் தீர்மானித்து, நன்கு அறிந்து வாக்களிக்கும் காலம் இது. 20 லட்சம் விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்பட்ட பம்ப் செட் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதனால் விவசாயிகளும், கோவையில் உள்ள பம்ப் செட் உற்பத்தியாளர்களும் பயன்பெறுவார்கள்.

அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலேயே தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் 60,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்கிறார். வாக்கு எண்ணிக்கை நாளில் நான் மொத்தமாக 60,000 ஓட்டுகள் வாங்குவேன் என்று தான் சொன்னேன் என்று மாற்றி சொல்வதற்கு வாய்ப்புள்ளது. அதிமுக வேட்பாளர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தானே இருந்தார். இப்போது அவரை ஏன் தெற்கில் நிற்க வைத்துள்ளார்கள்.

திமுக கணக்கு

அவரைத் தோற்கடிக்கும் முடிவில்தான் தொகுதியில் மாற்றி நிறுத்தப்பட்டாரா. தெற்கு தொகுதியில் போட்டியிடும் விருப்பமனுவை சமீபத்தில்தான் நான் வழங்கினேன். இதற்கு முன் தெற்கு தொகுதியில் நான் அதிக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. நான் இங்கு நின்றால்தான் திமுக வெற்றி பெறும் என்பதெல்லாம் இல்லை. இந்த செந்தில் பாலாஜி இல்லை என்றால் திமுகவுக்கு 100 செந்தில் பாலாஜிகள் வருவார்கள்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+