கோவையா.. கரூரா.. எங்கே போட்டி.. சிரித்து கொண்டே செந்தில் பாலாஜி கொடுத்த ஹின்ட்
கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 2026 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக வலுவாகவுள்ள கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற இந்தமுறை திமுக தீவிரம் காட்டி வருகிறது. திமுக மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி கரூரில் இருந்து மாறி கோவையில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இதற்கு கரூர் மக்களுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை விவரித்து செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் யாராவது விடுபட்டுள்ளார்களா, தகுதியற்றவர்கள் யாராவது சேர்க்கபட்டுள்ளனரா என்பதை பூத் வாரியாக ஆராய வேண்டும். அதைப் பார்த்து ஆட்சேபனைகளை தெரிவிக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்..

கள்ள ஓட்டுக்கள்
வரைவு வாக்காளர் பட்டியலை முழுமையாக ஆராய்ந்த பிறகு தான் கருத்துகளை பகிர முடியும். கடந்த தேர்தல்களில் எவ்வளவு வாக்கு பதிவாகியுள்றது என்பதை பார்த்தாலே , மீதமுள்ள சதவீதம் தெரிந்துவிடும். நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் நீக்கப்பட்டவர்கள் எந்த வருடம் சேர்க்கப்பட்டவர்கள் என்பதை பார்க்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை கொடுப்பது தேர்தல் ஆணையம் தான்.
அதிமுக ஆட்சியில் பாஜக அவர்களுடன் கூட்டணியில் இருந்தபோது கள்ள ஓட்டுக்கள் அவர்களின் கண்களுக்கு தெரியவில்லையா. அப்போது நல்ல ஓட்டுக்களாக இருந்தது, இப்போது கள்ள ஓட்டுக்கள் ஆகிவிட்டதா. இதெல்லாம் நன்கு தெரிந்தும் நயினார் நாகேந்திரன் திமுகவை விமர்சிப்பதில் நியாமில்லை.
திமுவை விமர்சிக்காமல்..
தமிழ்நாட்டில் பழைய அரசியல் கட்சிகள் என்றாலும், புதிய அரசியல் கட்சிகள் என்றாலும் திமுகவை விமர்சனம் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாது. இதுதான் தமிழக அரசியல் சூழல். விமர்சனம் செய்தால் மட்டுமே அவர்கள் அரசியல் களத்தில் இருக்க முடியும். திமுகவை விமர்சித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளபட்டுள்ளனர். பாஜக, அதிமுக என எந்த கட்சியாக இருந்தாலும் திமுகவை மட்டுமே விமர்சிப்பார்கள்.
மக்களிடத்தில் வலுவான இயக்கமாக, நல் அரசு நடத்தும் இயக்கமாக திமுக உள்ளது. யாருடைய விமர்சனங்களையும் காது கொடுத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அரசுக்கு நல்ல ஆலோசனை சொல்லும் விமர்சனங்களாக இருந்தால், நிச்சயமாக அதை காது கொடுத்து கேட்டு ஏற்றுக்கொள்வோம். அதிமுகவும் சரி புதிதாக வந்த கட்சிகளும் சரி, எங்களுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்று சொல்கிறார்கள்.
கோவை 10 தொகுதி
மக்களிடம் ஆதரவை பெற்ற இயக்கம் திமுக. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி தரும். நாங்கள் யாரையும் போட்டியாளராக பார்க்கவில்லை. யாரையும் குறைத்தும் மதிப்பிடவில்லை. நான் கோவை தொகுதியில் போட்டியிடப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவுவதை நானும் பார்த்தேன். கரூர் தொகுதி எனக்கு நன்றாகத் தான் இருக்கிறது.
கரூர் மக்கள் என்னை தொடர்ந்து ஜெயிக்க வைத்துக்கொண்டிருக்கின்றனர். கரூரில் என்னை 5 முறை வெற்றி பெற வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளுக்கு மதிப்பளிக்க தேவையில்லை. கரூர் மக்கள் தொடர்ந்து ஆதரவளித்துக் கொண்டிருப்பதால் அப்படிப்பட்ட சந்தேகம் தேவையில்லை. கோவையில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்களின் இலக்கு.
பாஜகவுக்கு அக்கறை இல்லை
திருப்பூர் மாவட்டத்தில் குப்பை எடுக்கும் பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது. அதற்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான மாற்று வழிகளை அரசு ஆராய்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டவர்கள் (அண்ணாமலை)
நிறைய வாக்குறுதிகளை அள்ளி விட்டார். அவர் உடனே பொறுப்பேற்பது போல தோற்றத்தை உருவாக்கினார்கள்.
இப்போது புதிதாக அரசியலுக்கு வந்தவர்களுக்கும் அப்படி ஒரு தோற்றம் கொடுக்கிறார்கள். முதல்வரை தேர்வு செய்வதில் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஊடகங்கள் தீர்மானிக்க முடியாது. ஒருவரை புகழ்ந்து எழுதுவதால் மாற்றங்களை உருவாக்கி விட முடியாது. பாஜக அரசு பொறுப்பேற்ற இந்த 12 வருடங்களில் கோவை மாவட்டத்திற்கு செய்த சிறப்பு திட்டம் என்ன. தமிழகத்தின் வளர்ச்சியில் பாஜகவிற்கு அக்கறையில்லை." என்றார்.
-
Senthil Balaji: கரூர் சம்பவம்.. 6 மணி நேரம் நடந்த விசாரணை.. சிபிஐ கேட்டது என்ன? செந்தில் பாலாஜி கொடுத்த பதில் -
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications