இது லிஸ்ட்லேயே இல்லையே.. கோவையில் செந்தில் பாலாஜி சர்ப்ரைஸ்.. வேலுமணி ஷாக்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு ஒரு வாரமே இருப்பதால் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். கோவையில் தொழில்தறை வளர்ச்சியை குறிவைத்து செந்தில் பாலாஜி செய்யும் பிரச்சாரம் அதிமுக, பாஜகவை கதிகலங்க வைத்துள்ளது.
கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாகவே இருந்துள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தாலும், கோவையில் ஒரு இடத்தில் கூட வெற்றிற பெறவில்லை. கோவையின் 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது. கோவையில் திமுகவை வெற்றி பெற வைப்பதற்காக இந்தமுறை செந்தில் பாலாஜியை நேரடியாக களமிறக்கியுள்ளனர்.

அதிமுகவின் பலம்
இதனால் கோவை தெற்கு தொகுதியை தமிழ்நாடே உற்று நோக்கி கொண்டிருக்கிறது. செந்தில் பாலாஜியின் வருகை கோவை மாவட்டம் முழுவதும் திமுகவுக்கு பாசிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் கொங்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. கோவையில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் ஆழமான நம்பகத்தன்மையை உருவாக்கியுள்ளனர்.
கோவை தொழில் மாவட்டம். பம்ப்செட் மோட்டார், கிரைண்டர், ஜவுளி, ஆட்டோமொபைல் தொடர்பான உற்பத்தி அதிகளவு உள்ளது. பல ஆயிரக்கணக்கான குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் கோவையில் அதிகமுள்ளன. இதற்காக கோவையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம். அதிமுக அதில் அதிக கவனம் செலுத்தினர். கடந்த 2021 தேர்தலில் கோவையில் அதிமுக வெற்றி பெறுவதற்கு அதுவும் ஒரு காரணம்.
கோவையின் மொத்த உற்பத்தி
அந்த அரசியலை செந்தில் பாலாஜி கையில் எடுத்துள்ளனர். கோவையில் 100க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் உள்ளன. செந்தில் பாலாஜி அந்த அமைப்புகள் ஒவ்வொன்றையும் நேரடியாக சென்று சந்தித்து வருகிறார். அவர்களின் பிரச்சனைகளை கூர்ந்து கவனித்து ஆலோசனை செய்கிறார். கடந்த காலங்களில் செய்த பணிகள், மேற்கொண்டு செய்ய போகும் பணிகளை விளக்குகிறார்.
கடந்த 10 நாட்களில் தொடர்ந்து தொழில் அமைப்பினரை சந்தித்து பேசி வருகிறார். அவர்களிடம் நம்பகத்தன்மை ஏற்படுத்துற்காக தான் கோவை தெற்கு தொகுதியில் குடியேறியுள்ளார். "தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தியில் கோவை 15 சதவீதம் உற்பத்தி பங்களிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் கோவையின் உற்பத்தியை 25 சதவீதமாக உயர்த்துவேன்" என்று கூறியுள்ளார்.
தொழில்துறையினர் வரவேற்பு
25 சதவீதம் உற்பத்தி என்பதை இலக்காக வைத்து பணியாற்றுவேன் என்று செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார். மேலும் கோவையின் உள்கட்டமைப்பு வசதிகளில் கூடுதல் கவனம் செலுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொழில்துறையினரிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications