ஜி.டி. நாயுடு மேம்பாலம் பஞ்சாயத்து.. வேலுமணிக்கு ஓப்பன் சேலஞ்ச் விட்ட செந்தில் பாலாஜி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை அவிநாசி சாலையில் ஜி.டி நாயுடு மேம்பாலம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. தங்கள் அட்சியில் அறிவிக்கப்பட்ட பாலத்தை திறந்து, திமுக அரசியல் செய்வதாக அதிமுக மற்றும் அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறி வருகிறார். இதற்கு தற்போது பதிலளித்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் அதிமுகவினருக்கு கூச்சமே இல்லை என்று ஆதாரத்துடன் பதில் அளிக்க தயாரா என்று சவால் விட்டுள்ளார்.

கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அவிநாசி சாலை மேம்பாலம் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி திறக்கப்பட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த பாலத்தை திறந்து வைத்தார். அதிமுக ஆட்சியில் தொடங்கிய மேம்பால பணிகள், தற்போது முடிவடைந்து திறக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக, திமுக கட்சி நிர்வாகளிடம் இப்போதும் விவாதம் நீண்டு கொண்டிருக்கிறது.

senthil-balaji-slams-admk-over-coimbatore-gd-naidu-flyover

கூச்சமே இல்லையா

கோவை சிங்காநல்லூர் பகுதியில் திமுக வாக்குச்சாவடி பயிற்சி கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, "கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை தொடங்கிட வேண்டும். கடந்த தேர்தல்களில் எடுத்த வாக்குகளை விட கூடுதலாக வாக்குகளை பெறுவதற்கு ஆலோசித்து செயல்பட வேண்டும்.

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை இரண்டாவது முறையாக முதலமைச்சராக்கும். இது திராவிட மண். இங்கு வேறு யார் வந்தாலும் காலூன்ற முடியாது. முதலமைச்சர் அவிநாசி மேம்பாலத்தை திறந்து வைத்த பிறகு, சிலர் அங்கு சென்ற இனிப்புகளை வழங்கினார்கள். அவர்களுக்கு கூச்சமே இல்லை.

திட்டங்கள்

யார் செய்த திட்டத்திற்கு, யாரோ இனிப்புகளை வழங்கி மக்களிடம் ஒரு மாயை உருவாக்க பார்க்கிறார்கள். மக்கள்அதை ஏற்க மாட்டார்கள். கோவையில் பெரியார் நூலகம், செம்மொழி பூங்கா என்று அடுத்தடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். பீகாரில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். அது போன்ற ஒரு சூழல் தமிழ்நாட்டில் வந்து விடக்கூடாது. அவர்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளை திமுக அனுமக்காது.

SIR யை பொறுத்தவரை திமுக மிக கவனமாக கையாண்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் முதலமைச்சர் இங்கு வரும்போது, புதிய திட்டங்களை தொடக்கி வைக்கிறார். பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்கிறார், தங்க நகை தொழிலாளர்களின் பூங்கா கோரிக்கை நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. தற்போது அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு கூடிய விரைவில் அந்த கட்டிட பணிகள் முடித்து அவர்களுக்கு ஒப்படைக்கப்படும்.

பதில் அளிக்க தயாரா

அவிநாசி சாலை மேம்பாலத்தை பொறுத்தவரை அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.80 கோடி மட்டும்தான் மதிப்பிலான நிதிக்கு தான் பணிகளை செய்திருந்தனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு வழக்குகளை முடித்து, ரூ.1,800 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. தங்கள் ஆட்சியில் 50 சதவீதம் பணிகள் முடிந்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.

ரூ.1,800 கோடியில் 50 சதவீதம் என்பது வெறும் ரூ. 80 கோடி தானா. மேலும் ஒவ்வொரு ஆண்டிலும் அந்த பாலத்திற்கு எவ்வளவு செலவழிக்கப்பட்டது என்று அவர்கள் ஆதாரத்துடன் கூறினால் நான் அதற்கு பதில் அளிக்கிறேன். 2026 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டம் திமுகவின் கோட்டை என்று அமையும் வகையில் தேர்தல் முடிவுகள் உணர்த்தும்.

கோவை சாலை பிரச்சனை

தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ளன. ஒவ்வொரு கட்சியும் அவர்களது வேலையை செய்வார்கள். மற்ற அரசியல் கட்சிகள் என்ன வேலை செய்கிறார்கள் என்று பார்ப்பது எங்களுடைய வேலை அல்ல. அவர்கள் கட்சி பணி அல்லது பிரச்சனைகள் தொடர்பாக அவர்களிடம் கேளுங்கள். எங்களைப் பொறுத்தவரை திட்டங்களை நாட்டு மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

சராசரியாக ஒரு சாலையின் ஆயுட்காலம் என்பது ஐந்து ஆண்டுகள் தான். கடந்த அதிமுக ஆட்சியில் சாலைகள் போடப்பட்டிருந்தால், இந்த 5 ஆண்டு காலத்தில் சாலை போட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் சாலைகள் போடாததால் தற்போது சாலைகள் போடப்பட்டு வருகின்றன. விடுபட்ட சாலைகளும் தேர்தலுக்கு முன்பு போடப்பட்டு விடும். " என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+