அமைச்சர் கே.என்.நேரு தம்பியின் கிளாஸ்மேட்! பொள்ளாச்சியில் மீண்டும் சீட் கேட்கும் சண்முகசுந்தரம்!

Subscribe to Oneindia Tamil

கோவை: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் மீண்டும் சீட் கேட்கும் திட்டத்தில் உள்ள சிட்டிங் எம்.பி.யான சண்முகசுந்தரம், இப்போது ஜரூராக வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறார்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள சண்முகசுந்தரத்தை பொறுத்தவரை அரசியல்வாதிக்குரிய எந்த அடையாளத்தையும் பார்க்க முடியாது. கட்சி கரைவேட்டியையோ, வெள்ளைச் சட்டையையோ அவர் விரும்புவதில்லை. டக் இன் செய்தவாறு கலர் ஷர்ட் கலர் பேண்ட் தான் எப்போதும் அவர் அணிவார். தேர்தல் நெருங்கும் சூழலில், இப்போது தான் சமீப நாட்களாக கட்சி கரைவேட்டிக்கு மாறியிருக்கிறார்.

Shanmugasundaram MP, who is planning to seek re-election in Pollachi Lok Sabha constituency, is now conducting employment camps as a regular.

இதனை சண்முகசுந்தரம் எம்.பி.யின் எளிமை என்று கூட எடுத்துக் கொள்ளலாம். பொள்ளாச்சி மக்களவை தொகுதியை பொறுத்தவரை அதிமுக வலிமையாக உள்ள ஒரு தொகுதியாகும். அப்படிப்பட்ட தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சண்முகசுந்தரம், கடந்த நான்கரை ஆண்டுகளில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அப்பகுதியில் கட்சியை வலிமைப்படுத்தியது போல் தெரியவில்லை என்கிறார்கள். .

கட்சியை வலிமைப்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை, தனது செல்வாக்கையாவது மக்கள் மத்தியில் பெருக்கியிருக்கலாம். இந்தச் சூழலில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியை எதிர்பார்த்து அதற்குரிய செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் சண்முகசுந்தரம்.

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும் பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரமும் கோவையில் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்பது கூடுதல் தகவலாகும். இதனால் நேரு மூலம் சீட் வாங்கிவிடலாம் எனக் கருதுகிறது எம்.பி.தரப்பு. இதனிடையே மக்கள் நீதி மய்யத்திலிருந்து திமுகவில் இணைந்த டாக்டர் மகேந்திரனும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+