சண்முகசுந்தரம்- பொள்ளாச்சி திமுக வேட்பாளர்: பாலியல் கொடூர சம்பவம் தேர்தலில் தாக்கம் ஏற்படுத்துமா?
Recommended Video

பொள்ளாச்சி: வரும் மக்களவைத் தேர்தலில் பொள்ளாச்சி தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் சண்முகசுந்தரம்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா, பெருமாள் புதூரைச் சேர்ந்தவர் கு. சண்முகசுந்தரம். 1970-ம் ஆண்டு பிறந்த இவர், பி.இ. மெக்கானிக்கல் பட்டதாரி. இவருக்கு வனிதா என்ற மனைவியும், நிஹாரிகா என்ற மகளும் உள்ளனர்.

விவசாயம், பின்னலாடை ஏற்றுமதி மற்றும் செங்கற்கள் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். மடத்துக்குளம் தளபதி தொழில்நுட்ப பயிற்சி மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளார். பொள்ளாச்சி, உடுமலை, கிடத்துக்கடவு ஆகிய ஊர்களில் மாணவ, மாணவியருக்கு இலவச போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார்.
திமுகவின் பொறியாளர் அணி மாநில துணைத் செயலாளராக பதவி வகித்து வரும் சண்முகசுந்தரம், ஏற்கனவே, கடந்த 2009ம் ஆண்டு பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டுள்ளார். அப்போது மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
[உங்கள் தொகுதியில் என்ன விசேஷம்.. தவறாமல் படியுங்கள்]
மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஆளுங்கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த சூழலில் திமுக வேட்பாளராக இத்தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார் சண்முகசுந்தரம். ஆளுங்கட்சிக்கு எதிரான விமர்சனங்களைத் தனக்கு சாதகமாக்கி இத்தொகுதியில் வெல்வாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை!












Click it and Unblock the Notifications