கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவையில் கொரோனா தேவிக்கு சிலை வைத்தது தவறு: சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி கருத்து!

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் கொரோனா தேவிக்கு சிலை வைத்தது தவறு என கோவை நாகசக்தி அம்மன் பீடம் சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி கருத்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கோவையில் கொரோனா தேவிக்கு சிலை வைத்தது தவறு: சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி கருத்து!

    தமிழகத்தில் கொரோனா பரவல் தினசரி பாதிப்பு 38 ஆயிரத்தை தாண்டி கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக தளர்வுகளற்ற ஊரடங்கால் தற்போது குறைந்த வண்ணம் இருக்கிறது.

    சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்த நிலையில் கோவையில் கொரோனா தேவிக்கு சிலை வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

    கொரோனா தேவிக்கு சிலை

    கொரோனா தேவிக்கு சிலை

    கோவை ஒண்டிபுதூர் பகுதியில் காமாட்சிபுரி ஆதீன மடத்தில் கொரோனா தேவிக்கு சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 48 நாட்கள் நடைபெறும் இந்த யாக பூஜைக்கு பின்னரே பொதுமக்களுக்கு வழிபட அனுமதி அளிக்கப்படும் என காமாட்சி புரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறியுள்ள நிலையில் கொரோனா தேவிக்கு சிலை வைத்தது தவறு என சிவசண்முக சுந்தர பாபுஜி தெரிவித்துள்ளார்.

    சித்தர்

    சித்தர்


    கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ளது நாகசக்தி அம்மன் பீடம் இந்த பீடத்தை சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் என்பவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக டெங்கு, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல் பரவல்களின் போது நிலவேம்பு கசாயம், பப்பாளி இலை சாறு போன்றவற்றை வழங்கி வந்தார்.

    கொரோனா தொற்று

    கொரோனா தொற்று


    தற்போது கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே கபசுர குடிநீர், மூலிகை கசாயம் போன்றவற்றை பொது மக்களுக்கு வழங்கி வந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் தமிழக அரசு சித்த வைத்தியத்திற்கு முழு அனுமதி அளித்தால் தமிழ்நாட்டில் கொரோனா நோயாளி உயிரிழப்பு இல்லாமல், கொரானா தொற்றை முழுமையாக ஒழித்துவிட முடியும்.

    ஆயுர்வேதா

    ஆயுர்வேதா

    சித்தா மற்றும் ஆயுர்வேதா மருத்துவம் மூலம் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.
    மேலும் கோவையில் கொரோனா தேவிக்கு சிலை வைத்து இருப்பது தவறு எனவும், கொரோனா சம்கார தேவிக்குதான் உண்மையில் சிலை வைத்து இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    English summary
    Coimbatore Nagasakthi Amman Peedam Swamigal says that there should not install statue for Coronadevi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X