கொரோனா தடுப்பு பணி குறித்த செய்தி.. கோவை சிம்பிளிசிட்டி ஆன்லைன் செய்தி நிறுவனர் கைது
கோவை: கோவை சிம்பிளிசிட்டி ஆன்லைன் செய்திதளத்தின் நிறுவனர் ஆண்ட்ரூ சாம் ராஜா பாண்டியனை ஆர்எஸ் புரம் போலீசார் கைது செய்துள்ளனர். மருத்துவர்கள் சுகாதார பணியாளர்கள் உபகரணங்களுக்கு குறைபாடுகளை எதிர்கொள்வதாகவும் ஊழல் நடப்பதாகவும் தவறான செய்தி வெளியிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி துணை ஆணையர் கார்த்திகேயன் அளித்த புகாரில், கோவை சிம்பிளிசிட்டி இணைய செய்திதளத்தில் அரசு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு எதிராக ஆத்திரமூட்டும் வகையில் தவறான செய்திகள் வெளியிட்டுள்ளனர்.

ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றில் செய்தித் தளத்தின் அறிக்கைகள் இருக்கின்றன. தமிழக அரசு இயந்திரம் கோவிட் 19க்கு எதிராக போராடிவரும் வேளையில், அரசு சுகாதார வல்லுநர்கள் மற்றும் பி.டி.எஸ் ஊழியர்களின் செயல்பாடுகள் குறித்து தவறான தகவல்கள் அந்த செய்தியில் இருந்தது என்று புகார் அளித்தார்.
இதனிடையே அரசாங்க மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உணவுக்காக போராடி வருவதாகவும், பி.டி.எஸ் ஊழியர்கள் ஏழைகளுக்கான கோவிட் நிவாரண நிதியைத் திருடுவதாகக் அந்த தளத்தில் தவறாக கூறப்பட்டிருந்ததாக எப்ஐஆரில் கூறப்படுகிறது.
இந்த புகாரைத் தொடர்ந்து ஐபிசி 188, 505 (i) பிரிவுகள் மற்றும் தொற்றுநோய்கள் சட்டத்தின் பிரிவு 3 இன் கீழ் ஆண்ட்ரூ சாம் ராஜா பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே சிம்பிளிசிட்டி ஆன்லைன் செய்திதளத்தின் நிறுவனர் ஆண்ட்ரூ சாம் ராஜா பாண்டியன் கைது செய்யப்பட்ட சில மணி நேரத்திற்கு பிறகு அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு பத்திரிகையாளர் மற்றும் இணையதள புகைப்படக் கலைஞர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்கள்.
செய்தி வெளியிட்டதற்காக பத்திரிக்கையாளரை போலீசார் கைது செய்த சம்பவத்திற்கு கோவை மற்றும் திருப்பூர் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications