பதுங்கிப் பாய்ந்த கட்டுவிரியன்.. பறிபோன பாம்புபிடி வீரரின் உயிர்.. கோவை அருகே சோகம்
கோவை: கோவை மாவட்டம், காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைக்குள் புகுந்த பாம்பைப் பிடிக்கச் சென்ற பாம்புபிடி வீரரின் காலை கட்டுவிரியன் பாம்பு கடித்ததில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் கடந்த 15 ஆண்டுகளாக பாம்புபிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டம், கோவை - தடாகம் சாலையில் உள்ள இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகும் பாம்புகளைப் பிடித்து வனப் பகுதியில் விடும் பணியையும் மேற்கொண்டு வருகிறார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாம்பு பிடிப்பதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், வடவள்ளியை அடுத்த காளப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைக்குள் பாம்பு இருப்பதாக நேற்று இரவு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அந்த தகவலின்பேரில் முரளி அப்பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது இருசக்கர வாகனங்களுக்கு இடையே 3 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, விஷம் அதிகமுள்ள அந்தப் பாம்பை அவர் பிடிக்க முயன்றார். அப்போது, முரளிதரனின் காலில் பாம்பு தீண்டியுள்ளது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திலேயே ரத்தம் வெளியேறிய நிலையில் முரளி மயங்கி விழுந்தார்.
இதுகுறித்து, அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 108 ஊழியர்கள் முரளியை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வடவள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முரளி கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு வகையான விஷமுள்ள பாம்புகளை பிடித்து வனப் பகுதியில் விட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பாம்பு பிடிக்கும்போது எதிர்பாராத வகையில் பாம்பு தீண்டியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 40 கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகளை மீட்டு அவர் வனப் பகுதியில் விட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications