எஸ்.பி.வேலுமணி வீட்டில் கல்யாணம்! ஊர் ஊராக நேரடியாக சென்று கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ்!

Subscribe to Oneindia Tamil

கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அண்ணன் மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதால் அதற்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் மும்முரமாக உள்ளார் அவர்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தபடியாக 2ஆம் கட்டத் தலைவர்களில் பவர்ஃபுல்லாக இருப்பவர் எஸ்.பி.வேலுமணி. கோவையை கடந்து தமிழகம் முழுவதும் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாளர்கள் வட்டம் அதிகம் உண்டு. கட்சியில் முக்கிய இடத்தில் இருந்தாலும் கூட அதனை எந்த இடத்திலும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்.

SP Velumani brother son marriage, so he gave Invitation to the party executive directly from town to town!

அதற்கு உதாரணமாக அண்மையில் நடந்த மதுரை அதிமுக மாநாட்டில் தொண்டர்களோடு தொண்டராக அவர்களை உற்சாகப்படுத்த ஒயிலாட்டம் ஆடியதை கூறலாம். அந்தளவுக்கு அதிமுகவினர் மத்தியில் எளிமையாக காட்சியளிக்கக் கூடியவர்.

இதனிடையே எஸ்.பி.வேலுமணியின் அண்ணனான எஸ்.பி.அன்பரசன் மகனுக்கு வரும் ஐப்பசி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊர் ஊராக சென்று அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் நேரடியாக அழைப்பிதழ் கொடுத்து வரும் எஸ்.பி.வேலுமணி, திருமணத்திற்கு கட்டாயம் வர வேண்டும் என அழைப்பு விடுத்து வருகிறார்.

எஸ்.பி.வேலுமணி இல்ல மணவிழாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார். கட்சி நிர்வாகிகளுக்கு அனுப்பப் வேண்டிய அழைப்பிதழ்களை அதிமுக தலைமைக்கழகத்தில் கொடுத்துவிட்டால் அங்கிருந்து ஒரே நாளில் கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுவிடும். ஆனால் அது போல் செய்யாமல் நேரடியாகவே சென்று அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு விடுத்து கவனம் ஈர்த்துள்ளார் எஸ்.பி.வேலுமணி.

இதுவரை அதிமுகவில் எந்த நிர்வாகியும் இது போன்றதொரு அழைப்பு விடுத்ததில்லை. எல்லோரும் தலைமைக்கழகம் மூலம் தபாலிலோ , கொரியரிலோ அழைப்பிதழ்களை அனுப்புவது தான் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+