ஆபாச ஆட்டம்.. சிக்கிய "வினோதினி வீடியோ".. மிரண்ட போலீஸ்.. கையில் "பொருள்" வேற.. அதென்ன வாயில்? ஓ காட்
கையில் வீச்சரிவாள், வாயில் சிகரெட்டுடன் வீடியோ போட்ட பெண்ணை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்
கோவை: தமன்னா என்ற இளம்பெண்ணை கோவை போலீசார் தனிப்படை அமைத்து தேடி கொண்டிருக்கிறார்கள்.. என்ன காரணம்? வன்முறைகளை கட்டுக்குள் கொண்டுவர, கோவை மாநகர போலீசார் கையில் எடுத்துள்ள அதிரடிகள் என்னென்ன?
கோவை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் தமன்னா... வினோதினி என்று மற்றொரு பெயரும் உண்டு.. இவர் இன்ஸ்டாகிராமில் ''fans call me Thamanna'' என்ற பெயரில் அக்கவுண்ட் வைத்துள்ளார்...
நிறைய டான்ஸ்களை ஆடி வீடியோக்களை அதில் பதிவிட்டு வந்தார்.. அவர் ஆடும் டான்ஸ் பெரும்பாலும், ரவுடிசம் பாடல்களுக்குத்தான்..

வீச்சரிவாள்
அதுவும், சும்மா ஆட மாட்டார்.. கையில், வீச்சரிவாள், கத்தி, இப்படியான ஆயுதங்களை ஏந்திக் கொண்டே டான்ஸ் ஆடுவார்.. சில சமயம், கையில் சிகரெட்டும் இருக்குமாம்.. விளையாட்டுக்காகவும், ஜாலிக்காகவும், நிறைய லைக்குகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இப்படியெல்லாம் வீடியோக்களை பதிவிடவும், அதுவே அவருக்கு இப்போது வினையாகிவிட்டது. கோவை மாநகரில் கடந்த மாதம் 12 மற்றும் 13 ஆகிய 2 நாட்களில் இருவேறு கொலை சம்பவங்கள் நடந்தன.. பட்டப்பகலில், தங்கள் கண்முன்னாலேயே நடந்த அந்த கொலைகளை பார்த்து, கோவை மக்கள் அதிர்ந்து போய் கிடக்கிறார்கள்..

ரீல்ஸ் ரீல்ஸ்
இந்த சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களை, கோவை மாநகர போலீசும் கைது செய்துள்ளது.. மேலும் இச்சம்பவங்கள் குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு, அதன்மூலமாகவும் குற்றவாளிகளை கைது செய்துள்ளது.. அந்தவகையில்தான், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிட்ட தமன்னாவை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர். அதேபோல, "பிரகா சகோதரர்கள்" என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர்கள் குழு, பொம்மை துப்பாக்கிகள் மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடியோக்களை (ரீல்ஸ்) வெளியிட்டு வந்தனர்...

வினோத வினோதினி
இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தைத்தான், கோவையை சேர்ந்த பிரபல ரவுடிகள் தீவிரமாக பின்பற்றி வந்திருக்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, இந்த பிரகா சகோதரர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் தீவிர உறுப்பினராக இருப்பவர் தமன்னா.. இதை பார்த்துதான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கர ஆயுதங்களுடன் புகைப்பிடிப்பது போன்ற வீடியோக்களை வெளியிட்டு வந்திருக்கிறார். இப்போது தமன்னாவையும் கைது செய்ய கோவை மாநகர போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர்.

விநோதினியா
இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சொல்லும்போது, "இன்ஸ்டாகிராம் கணக்குகளில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோக்களை வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இளம்பெண் வினோதினி என்ற தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது போன்று வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பெண் பணக்கார குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களுடன் நட்பாக பழகி, நண்பர்களின் உதவியுடன் பணம் பறித்துள்ளார். வீடியோக்கள் மூலம் 2 ரவுடி குழுக்களுக்கு இடையே பகையை வளர்க்கவும் முயற்சி செய்துள்ளார். விரைவில் வினோதினியை கைது செய்து சிறையில் அடைப்போம்" என்றார்.

நர்ஸ்
தமன்னாவுக்கு 23 வயதாகிறது.. இவர் ஒரு நர்ஸ்.. வினோதினி நர்சிங் டிப்ளமோ முடித்தவர்.. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவராம்.. ஆனாலும், இவர் பல ஆண்டுகளாக கோவையில் உள்ள பீளமேடு, காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகிறார்.. அதுமட்டுமல்ல, ஏற்கனவே இவர் ஒரு குற்ற சம்பவத்தில் கைதாகியும் இருக்கிறார்.. கடந்த 2021ல் பீளமேடு போலீசார் தமன்னா மற்றும் சூர்யா என்கிற சூர்யபிரசாத் ஆகியோரை 2 கிலோ 250 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்துள்ளனர்.

சாட்டையடி
இப்போது, கோவை கமிஷனரின் அறிவுறுத்தலின்படி, மாநகரில் ரவுடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்தும் சோஷியல் மீடியாக்களில் ஆயுதங்களை கொண்டு வீடியோ பதிவிடும் நபர்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது... அதன் அடிப்படையில் கோவை மாநகரில் ரவுடி செயல்களில் ஈடுபடும் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களை கொண்டு மக்களை மிரட்டுகின்ற தொணியில் வீடியோ பதிவேற்றம் செய்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கால் மீ தமன்னா
கோவை கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் கைதாகிய நிலையில்தான் நேற்று, தமன்னா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் அரிவாள், பட்டாக்கத்தியுடன் வீடியோ பதிவிட்டுள்ளார்.. அந்த வீடியோவும் வேகமாக சோஷியல் மீடியாவில் பரவவும் போலீசாரின் கவனத்துக்கு சென்றதாக தெரிகிறது. அப்போதுதான், "பிரண்ட்ஸ் கால் மீ தமன்னா" என்ற பெயரில் இருந்து அந்த வீடியோ வெளியானதையும் கண்டுபிடித்தனர்... அதுமட்டுமல்ல, வசதி படைத்த இளைஞர்களிடம் நைசாக பேசி, அவர்களை தன்னுடைய இடத்திற்கு வரவழைத்து விடுவாராம் தமன்னா. ஆனால், அதற்கு முன்பேயே, தன்னுடைய ஆண் நண்பர்களை அங்கே மறைந்து நிற்க சொல்வாராம்.

டபுள் டீம்
இந்த அப்பாவி இளைஞர்கள் அப்பாவி அங்கே வந்ததும், அவர்களை மிரட்டி பணமும் பறித்து வந்துள்ளார். அதேபோல இதுபோன்ற வீடியோக்களையும் வெளியிட்டு, 2 குழுக்களுக்கு இடையே பகையை உருவாக்கவும் முயற்சி செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இப்போது தமன்னாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது திருப்பூரில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைக்கவும், தனிப்படையினர் திருப்பூருக்கு விரைந்துள்ளனர். திருப்பூரில் முகாமிட்டு அவர் எங்கு உள்ளார் என்பது குறித்து அந்த மாவட்ட போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications