நன்றிக்கடன்.. நான் இருக்கேன் தைரியமா இருங்க- கோவை தங்கம் குடும்பத்தினரை நெகிழவைத்த முதல்வர் ஸ்டாலின்
கோவை : கோவை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைந்த வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, அக்கறையோடு விசாரித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிகுந்த பணிச்சுமைகள், உடல்நலக்குறைவுக்கு மத்தியுலும் முதல்வர் ஸ்டாலின் தங்கள் வீட்டுக்கு வந்ததற்கு கோவை தங்கம் குடும்பத்தினர் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
அதற்கு முதல்வர் ஸ்டாலின், நான் தான் கோவை தங்கத்திற்கு நிறைய நன்றிக்கடன் பட்டுள்ளேன், எதற்கும் கவலைப்பட வேண்டாம் என உருக்கமாகப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

கொங்கு மண்டல பயணம்
பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் கோவை புறப்பட்டுச் சென்றார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கோவை வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, மு.பெ.சாமிநாதன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர்.

நேரா காரை விட்ட ஸ்டாலின்
அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள சமீபத்தில் மறைந்த வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் இல்லத்திற்கு சென்று அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கோவை தங்கம் குடும்பத்தாரிடம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.

நன்றிக்கடன் பட்டுள்ளேன் - நெகிழ்ச்சி
கோவை தங்கம், சில காலம் மட்டுமே திமுகவில் பணியாற்றிய நிலையிலும், தமிழக முதலமைச்சரே நேரில் வந்து ஆறுதல் கூறியதால் நெகிழ்ந்துபோன கோவை தங்கத்தின் குடும்பத்தினர், முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். அதற்கு, எனக்கு எதுக்கு நன்றி, நான் தான் கோவை தங்கத்திற்கு நிறைய நன்றிக்கடன் பட்டுள்ளேன், நான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்பட வேண்டாம். தைரியமா இருங்க என உருக்கமாகப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தங்கம்
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏவாக இருந்தவர் கோவை தங்கம். பின்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தமாகா மாநில துணைத் தலைவராகவும் இருந்தார். 2021 சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமாகாவுக்கு வால்பாறை தொகுதி ஒதுக்காததால் கோவை தங்கம் கடும் அதிருப்தி அடைந்து தமாகாவில் இருந்து விலகினார்.

திமுகவில்
பின்னர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் கோவை தங்கம். திமுக கூட்டணி வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்தார். கடந்த அக்டோபர் 12ஆம் தேதி அவர் மறைவுற்ற நிலையில், அவருக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். மாற்றுக் கட்சிகளில் இருந்தபோதும், கழகத்தில் இணைந்த பின்பும் என எப்போதுமே அவர் என் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருந்தவர் கோவை தங்கம் என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

இன்று கரூரில்
கோவை தங்கம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின் பின்னர் அங்கிருந்து ஈரோடு மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று இரவு கரூர் செல்லும் அவர் அங்கு ஓய்வெடுக்கிறார். நாளை காலை 10 மணிக்கு அரவக்குறிச்சி பகுதியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

பிரதமருடன் ஒரே மேடையில்
நாளை பிற்பகலில் திண்டுக்கல் செல்லும் மு.க.ஸ்டாலின், சின்னாளபட்டி காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் மதுரை சென்று விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
-
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி!












Click it and Unblock the Notifications